தளபதி விஜயின் மாஸ்டர் படத்தின் இறுதியில் JD &  சாருவின் நிலை என்ன..? ட்ரெண்டாகும் மாளவிகா மோகனனின் பதில் இதோ!

மாஸ்டர் படத்தின் இறுதியில் JD -சாருவின் நிலை குறித்த பேசிய மாளவிகா மோகனன்,Malavika mohanan about the fate of jd and charu in end of master | Galatta

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகரான தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார்.

இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்புகள் வருகிற பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு காத்திருக்கின்றனர்.

முன்னதாக முதல் முறை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக கொரோனா காலகட்டத்தை மீறி மிகப் பெரிய பிளாக்பஸ்டராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இத்திரைப்படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடிகை மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அடுத்ததாக மாளவிகா மோகன் நடித்துள்ள மலையாள திரைப்படமான கிறிஸ்டி திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் #AskMalavika என்ற ஹேஷ்டேக்கில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது மாஸ்டர் திரைப்படத்தில் சிறைக்கு சென்ற பிறகு JD மற்றும் சாரு கதாபாத்திரங்களின் நிலை கடைசியில் என்ன ஆனது? JD, சாருவை மீண்டும் சந்தித்தாரா? என கேட்டபோது, “கட்டாயமாக அவர் சந்தித்தார்! பின்னர் நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தோம்” என நடிகை மாளவிகா மோகனன் பதிலளித்துள்ளார். மாளவிகா மோகனின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…
 

Of course he did. And then they fell in love properly & got married & lived happily ever after 😉🥰 hehe https://t.co/DkufOeMOV9

— malavika mohanan (@MalavikaM_) January 28, 2023

இயக்குனராக அவதாரம் எடுத்த தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

இயக்குனராக அவதாரம் எடுத்த தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!

எப்போது நடிப்பதை நிறுத்துவீங்க... மகனுடன் நேருக்கு நேர் பதிலளிக்கும் RJபாலாஜி - ரன் பேபி ரன் பட கலகலப்பான ஸ்பெஷல் பேட்டி!
சினிமா

எப்போது நடிப்பதை நிறுத்துவீங்க... மகனுடன் நேருக்கு நேர் பதிலளிக்கும் RJபாலாஜி - ரன் பேபி ரன் பட கலகலப்பான ஸ்பெஷல் பேட்டி!

தயாரிப்பாளராக களமிறங்கும் MSதோனியின் முதல் படம்… அதிரடியாக வந்த அறிவிப்பு இதோ!
சினிமா

தயாரிப்பாளராக களமிறங்கும் MSதோனியின் முதல் படம்… அதிரடியாக வந்த அறிவிப்பு இதோ!