தளபதி விஜயின் மெகா பிளாக்பஸ்டர் வாரிசு... 3வது வாரத்தில் இத்தனை கோடி வசூலா..? பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ!

தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் 275 கோடி வசூலித்துள்ளது,thalapathy vijay in varisu movie crossed 300crores worldwide | Galatta

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி தளபதி 67 படத்தில் இணைந்துள்ளது. விக்ரம் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் தளபதி 67 திரைப்படம் இந்திய அளவில் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. மேலும் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியது பிப்ரவரி 1,2,3 ஆகிய நாட்களில் தொடர்ச்சியாக தளபதி 67 திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது.

முன்னதாக கலைஞர் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசானது. முதல்முறையாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், வம்சி இயக்குனர் பைடபல்லி இயக்கத்தில் பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக வாரிசு திரைப்படத்தை ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக கொண்டாடி வருகின்றனர்.

ஆரம்பத்தில் வாரிசு திரைப்படத்தில் மீது பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தபோதும் தொடர்ச்சியாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது தளபதி விஜயின் வாரிசு. அந்த வகையில் தற்போது உலக அளவில் வாரிசு திரைப்படம் 275 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் 193.94 கோடியும் வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலர்களும் உலகம் முழுவதும் மொத்தமாக 275.69 கோடியும் வசூலித்துள்ளதாக வர்த்தக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் வாரிசு படத்தின் வசூல் 300 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 ப்ரோமோ எப்போது..? அதில் என்னென்ன இருக்கும்..?- செம்ம மாஸாக வந்த ருசிகர தகவல் இதோ
சினிமா

விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 ப்ரோமோ எப்போது..? அதில் என்னென்ன இருக்கும்..?- செம்ம மாஸாக வந்த ருசிகர தகவல் இதோ

சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அவதார் பட தொழில்நுட்பக்குழு! பிரம்மிப்பான தகவல் குறித்த விவரம் உள்ளே
சினிமா

சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அவதார் பட தொழில்நுட்பக்குழு! பிரம்மிப்பான தகவல் குறித்த விவரம் உள்ளே

இயக்குனராக அவதாரம் எடுத்த தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

இயக்குனராக அவதாரம் எடுத்த தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!