ராஜமௌலிக்கு புகழாரம் சூட்டிய Jurassic Park இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் - புது படத்திற்காக இணைந்த சர்வதேச கூட்டணி.. Special Interview இதோ..

ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை புகழ்ந்த ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் - Steven Spielberg appreciate Rajamouli RRR movie | Galatta

கடந்த ஆண்டு இந்திய சினிமாவில் மிக முக்கியமான திரைப்படமாக வெளியானது 'ஆர்.ஆர்.ஆர்' இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கான், ஆலியாபாட், ஸ்ரேயா சரண் ,ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஒலிவியா மோரிஸ், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்த இப்படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைத்தார். மிகப்பெரும் எதிர்பார்பின் மத்தியில் வெளியான இந்த திரைப்படம் உலகளவில் இமாலய வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அன்கீகாராத்தை பெற்றது. குறிப்பாக உலகின் உயரிய விருதான ஆஸ்கார் விருதில் சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. மேலும் கோல்டன் குலோப் விருதை சிறந்த பாடல் பிரிவில் ஆர் ஆர் ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றது. இந்த படத்திற்கான கவனம் நாளுக்கு நாள் உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜுராஸிக் பார்க், சின்லர் லிஸ்ட், இன்டியான ஜோன்ஸ், டின் டின், ஈ.டி போன்ற தலைசிறந்த படைப்புகளை இயக்கிய உலகின் தலைசிறந்த இயக்குனரான ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்  ஆர் ஆர் ஆர் படத்தை பார்த்து விட்டு பாராட்டியுள்ளார்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்  வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டு கடந்த ஆண்டு உலகம் முழுதும் வெளியான திரைப்பாம் ‘ஃபேபில்மேன்ஸ்’ இந்த திரைப்படம் இந்தியாவில் பிப்ரவரி 10ம் தேதி வெளியாகவுள்ளது. இதனையடுத்து இந்தியாவின் பெருமைமிகு இயக்குனரான ராஜமௌளியிடம்  ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்  ஒரு கலந்துரையாடலில் கலந்து கொண்டார். இந்த உரையாடலின் ஆரம்பத்திலே ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆர் ஆர் ஆர் படம் குறித்து ராஜமௌலியிடம்,

“நான் இதை சொல்லி ஆக வேண்டும் உங்கள் படம் மிக பிரமாதமாக இருந்தது. நான் உங்களை சந்தித்த போது நான் படம் பார்க்கவில்லை. நான் கடந்த வாரம் தான் பார்த்தேன். நிச்சயமாக அது சிறந்த படம்.என்னோட கண்களை என்னால் நம்ப முடியவில்லை.‌என்னை பொறுத்தவரை ஆர் ஆர் ஆர் திரைப்படம் கண்களுக்கு இனிப்பு வழங்கியது போல் இருந்தது. படத்தில் நடித்த ராம்சரண், ஜூனியர் என்டி ஆர், ஆலியா வின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. உங்கள் படத்தில் கதையை நான் கவனிக்கும் போது நான் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். நீங்கள் ஒவ்வொரு காட்சியையும் காட்சியமைத்தது அழகாக இருந்தது. ஆகசிறந்த அனுபவத்தை அந்த படம் எனக்கு கொடுத்தது. ஆர்ஆர்ஆர் படத்திற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார் இயக்குனர் ஸ்பீல் பெர்க்.

அதற்கு ராஜமௌலி “நான் கிட்டத்தட்ட இந்ந நாற்காலியில் இருந்து எழுந்து ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டேன். அது போல இருக்கிறது. நீங்கள் என் படத்தை பற்றி கூறியது.‌ நன்றி சார்” என்றார்

மேலும் அவரை தொடர்ந்து ஸ்பீல் பெர்க், “நாம் நேரில் சந்திக்கும்போது நான் இதுகுறித்து மேலும் பேச விரும்புகிறேன் எனக்கு படம் பற்றி நிறைய கேள்விகள் உள்ளது.‌நாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டும்” என்றார். அதற்கு ராஜமௌலி “நிச்சயம் உங்களை தேடி வருவேன் சார்.இந்த வாய்ப்பை நான் நிச்சயம் சரியாக பயன்படுத்தி கொள்வேன்” என்று நன்றியுடன் தெரிவித்தார்.

இந்த உரையாடல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக ஆர் ஆர் ஆர் படத்தை பார்த்து விட்டு உலக புகழ்பெற்ற அவதார், டைட்டானி பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் ராஜமௌலியையும் படக்குழுவினரையும் பாராட்டினார் என்பது குறிப்பிடதக்கது.

தனுஷ் வாத்தியார் இல்லை, அவர் ‘வாத்தி’.. இயக்குனர் வெங்கியின் சுவாரஸ்யமான பேட்டி.. - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

தனுஷ் வாத்தியார் இல்லை, அவர் ‘வாத்தி’.. இயக்குனர் வெங்கியின் சுவாரஸ்யமான பேட்டி.. - வைரலாகும் வீடியோ இதோ..

வாத்தி பட INTERVAL சீன்ல தனுஷ் சாரோட நடிப்பு... பிரம்மித்த இயக்குனர் வெங்கி அட்லுரி! அட்டகாசமான வீடியோ இதோ
சினிமா

வாத்தி பட INTERVAL சீன்ல தனுஷ் சாரோட நடிப்பு... பிரம்மித்த இயக்குனர் வெங்கி அட்லுரி! அட்டகாசமான வீடியோ இதோ

அஜித் குமாரின் துணிவு பட OTT ரிலீஸோடு வரும் ஸ்பெஷல் ட்ரீட்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! விவரம் உள்ளே
சினிமா

அஜித் குமாரின் துணிவு பட OTT ரிலீஸோடு வரும் ஸ்பெஷல் ட்ரீட்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! விவரம் உள்ளே