ரிலீசுக்கு முன் வந்த ஜெயம் ரவி - நயன்தாராவின் இறைவன் பட புது ட்ரீட்… விறுவிறுப்பான TREATMENT OF இறைவன் வீடியோ!

ஜெயம் ரவியின் இறைவன் பட TREATMENT OF இறைவன் வீடியோ,jayam ravi in iraivan movie treatment of iraivan video out now | Galatta

இதுவரை நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களிலேயே இல்லாத அளவிற்கு மிரட்டலான சைக்கோ திரில்லர் படமாக நாளை செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் இறைவன் திரைப்படத்திலிருந்து TREATMENT OF இறைவன் எனும் விறுவிறுப்பான வீடியோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகர்களில் ஒருவராக தொடர்ச்சியாக ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதை களங்கள் கொண்ட தரமான படங்களை விருந்து வைக்கும் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக அசத்தலான விருந்துகள் காத்திருக்கின்றன.  அந்த வகையில் வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக 100 கோடி ரூபாய் செலவில் தனது 32 வது உருவாகும் ஜீனி படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் இத்திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார் . சமீபத்தில் ஜீனி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி தற்போது நடித்து வருகிறார். இந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் சைரன் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் & ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற கலக்கல் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் M.ராஜேஷ் இயக்கத்தில் தனது திரைப்பயணத்தின் 30வது திரைப்படமாக உருவாகும் Brother படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகிறார். இந்த வரிசையில் ஜெயம் ரவி நடிப்பில் நாளை செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படம் தான் இறைவன். வாமனன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் I.அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள இறைவன் திரைப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார். 

விஸ்வரூபம் பட வில்லன் நடிகர் ராகுல் போஸ் மிரட்டலான சைக்கோ கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்க, ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன்,  சார்லி, வினோத் கிஷன், விஜயலட்சுமி, அழகம் பெருமாள், பக்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஹரி.K.வேதாந்த் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்ய, இறைவன் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சென்சாரில் A சான்றிதழ் பெற்ற இறைவன் படம் எந்த CUTகளும் இல்லாமல் பல மிரட்டலான காட்சிகள் கொண்ட படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் தற்போது இறைவன் திரைப்படத்திலிருந்து சர்ப்ரைஸாக TREATMENT OF இறைவன் எனும் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். நயன்தாராவும் ஜெயம் ரவியும் வீட்டிலிருந்து வெளியில் கிளம்பும்போது ஒரு மர்மமான கடிதம் வீட்டு வாசலில் கிடக்கிறது அந்த கடிதத்தை படித்தவுடன் நடிகர் ஜெயம் ரவி ஆக்ரோஷமாக அந்த சைக்கோ கொலைகாரனை தேடும் விறுவிறுப்பான வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த TREATMENT OF இறைவன் வீடியோ இதோ…