தளபதி விஜயின் லியோ பட 2வது பாடல் ரிலீஸ் அப்டேட்... சோகத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழுவின் அதிரடி அறிவிப்பு இதோ!

தளபதி விஜயின் லியோ பட இரண்டாவது பாடல் ரிலீஸ் அறிவிப்பு,thalapathy vijay in leo movie second single badass release announcement | Galatta

இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதால் சோகத்தில் மூழ்கிய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தளபதி விஜயின் லியோ பட குழுவினர் தற்போது 2வது பாடல் ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக தென்னிந்திய திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை கொண்ட தளபதி விஜயின் திரைப்படங்கள் மீது எவ்வளவு ஆர்வம் இருக்கிறதோ அதே அளவு ஆர்வம் இசை வெளியீட்டு விழாக்களின் மீதும் உண்டு. அதற்கு மிக முக்கிய காரணம் பிரம்மாண்டமாக நடைபெறும் அந்த இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசும் பேச்சும் அதில் ஸ்பெஷலாக அமைந்திருக்கும் குட்டி ஸ்டோரியும் தான். சமீப காலங்களில் தளபதி விஜய்யின் ஒவ்வொரு திரைப்படங்களும் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றி படங்களாக கொண்டாடப்படும் நிலையில் அதன் இசை வெளியீட்டு விழாக்களில் தளபதி விஜய் பேசும் பேச்சும் குட்டி ஸ்டோரியும் மிகப்பெரிய கவனத்தை ஏற்படுத்தி வருகிறது. 


அந்த வகையில் இந்த முறை தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக எல்லோரும் ஆவலோடு காத்திருக்க அந்த இசை வெளியீட்டு விழா இந்த முறை சென்னையில் இல்லை தமிழகத்தில் இல்லை இந்தியாவில் இல்லை என ஆரம்பத்தில் பலவிதமான பேச்சுகள் நிலவய நிலையில், மதுரை, கோயமுத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் நடக்கலாம் என தகவல்கள் பரவிய நிலையில், அதெல்லாம் எதுவும் இல்லை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கிலேயே நடைபெறுகிறது என தகவல்கள் வெளிவந்தன. மேலும் அதற்கான முக்கிய ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. இதனிடையே இசை வெளியீட்டு விழாவிற்கான டிக்கெட்டுகள் மீது மிக அதிகமான கோரிக்கைகள் ஏற்பட்டிருப்பதாலும் பாதுகாப்பு காரணங்களினாலும் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாய் அறிவித்தது. சமீபத்தில் இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் நேர்ந்த கசப்பான சம்பவமும் இந்த முக்கிய முடிவுக்கு ஒரு காரணமாய் அமைந்திருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். 


இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெறாததால் சோகத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது லியோ படக்குழு புத்தம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உருவாக்கி இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏற்கனவே தளபதி விஜய் நடித்து வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்த இமாலய வெற்றியை பதிவு செய்யும் வகையில் இந்த கூட்டணி மீண்டும் லியோ திரைப்படத்தில் இணைந்து இருக்கிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரித்திருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. முன்னதாக தளபதி விஜயின் லியோ படத்தின் முதல் பாடலாக வெளிவந்த “நா ரெடி” பாடல் பட்டித் தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வைரல் ஹிட்டான நிலையில், அடுத்தடுத்து டீசர் மற்றும் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தளபதி விஜயின் லியோ படத்தின் இரண்டாவது பாடலாக #Badass என்ற பாடல் நாளை செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை அறிவிக்கும் வகையில் அசத்தலான புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

#Badass - #LeoSecondSingle from tomorrow 😎🔥#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @Jagadishbliss @VishnuEdavan1 @SonyMusicSouth #Leo #BadassFromTomorrow pic.twitter.com/Wu3ckSQmRF

— Seven Screen Studio (@7screenstudio) September 27, 2023