ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சித்தார்த்தின் சித்தா பட ஸ்பெஷல் GLIMPSE... சுவாரஸ்யமான வீடியோ!

சித்தார்த்தின் சித்தா பட ஸ்பெஷல் ப்ரோமோ வெளியீடு,siddharth in chithha movie search for sudhari promo out now | Galatta

நடிகர் சித்தார்த் நடிப்பில் நாளை செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் சித்தா திரைப்படத்திலிருந்து ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஒன்று தற்போது வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனக்கென தனி பாணியில் தனது ஒவ்வொரு திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாக கையாண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என  தொடர்ச்சியாக பல வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தரமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களுக்கு வெரைட்டியான படங்களை வழங்கி வரும் சித்தார்த் நடிப்பில் கடைசியாக தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த டக்கர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வரிசையாக வெளிவர இருக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்க, தற்போது தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

முன்னதாக தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்தில் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தன்னுடைய காதலில் சொதப்புவது, எப்படி ஜில் ஜங் ஜக் மற்றும் அவள் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்த சித்தார்த் அடுத்த படைப்பாக தனது தயாரிப்பு நிறுவனமான ETAKI என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் தான் சித்தா. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி மற்றும் சிந்துபாத் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் S.U.அருண் குமார் சித்தா படத்தை எழுதி இயக்கியுள்ளார். 

சித்தார்த் மற்றும் நிமிஷயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த சித்தா திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். சுரேஷ் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கும் சித்தா திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பின்னணி இசை சேர்த்துள்ளார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார். படத்தின் இயக்குனரான S.U.அருண்குமார் மற்றும் கவிஞர் யுக பாரதி ஆகியோர் சிட்டா படத்தின் பாடல்களை எழுதியுள்ளனர். நடிகர் சித்தார்த்தன் திரை பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் வித்தியாசமான எதார்த்தமான ஒரு கதைக்களத்தில் சித்தா திரைப்படம் நாளை செப்டம்பர் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில் சித்தார்த்தன் சித்தா திரைப்படத்தின் Search For சுந்தரி எனும் ஸ்பெஷல் ப்ரோமோ தற்போது வெளியானது. காணாமல் போன தனது அண்ணன் குழந்தையை தேடி போட்டோவை காண்பித்து பெட்ரோல் பங்கில் பலரிடம் சித்தார்த் விசாரிக்கும் ஒரு முக்கிய காட்சியின் ப்ரோமோ வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்க் கீழ காணலாம்.