ஜவான் பட வெற்றிக்கு வாழ்த்திய தளபதி விஜய்... லியோ படத்திற்கு காத்திருப்பதாக தெரிவித்த ஷாருக்கான்! விவரம் உள்ளே

ஷாருக்கானின் ஜவான் படத்திற்கு வாழ்த்திய தளபதி விஜய்,Thalapathy vijay wishes to shah rukh khan for jawan success | Galatta

இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளிவந்து தற்போது உலக அளவில் மெகா ஹிட் ஆகியிருக்கும் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்காக தளபதி விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். உலக அளவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர் ஷாருக்கான் அவர்களின் ஜமால் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. நடிகர் ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து கடைசியாக வெளிவந்த பதான் திரைப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் ஷாருகானின் ஜவான் படமும் 1000 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் அட்லி முதல் முறையாக ஜவான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்கி இருக்கிறார்.

இயக்குனர் அட்லி உடன் இணைந்து லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் ராக்ஸ்டார் அனிருத் ஆகியோரும் ஜவான் படத்தில் பாலிவுட் சினிமாவில் மாஸ் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்திருக்கும் ஜவான் திரைப்படத்தில் பிரியாமணி, சானியா மல்ஹோத்ரா, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். GK.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ள, ஜவான் திரைப்படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளிவந்த ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று இருக்கும் நிலையில் தற்போது ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்திருப்பதால் அதற்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் X பக்கத்தில் தளபதி விஜய் ரசிகர்கள் குழு ஒன்று, ஜவான் படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்ததற்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டதற்கு நடிகர் ஷாருகான் தனது பக்கத்தில் அதை பகிர்ந்து, “உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி தளபதியின் அடுத்த படத்திற்காக (லியோ) காத்திருக்கிறேன். ஐ லவ் விஜய் சார்!” என பதிவிட்டார். 

இந்த நிலையில் நடிகர் ஷாருக் கானின் இந்த பதிவை குறிப்பிட்டு தளபதி விஜய் தற்போது ஜவான் படத்தின் வெற்றிக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். அந்த பதிவில், "ஜவான் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்காக ஷாருக் கான் இயக்குனர் அட்லி மற்றும் ஜவான் பட குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் லவ் யூ டூ ஷாருக் கான் சார்" என பதிவிட்டு இருக்கிறார். முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படம் ஜவான் படத்திற்கு பிறகு இந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், அடுத்த சில தினங்களில் டீசர் , ட்ரெய்லர் குறித்த அறிவிப்புகளும் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்புகளும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் ரசிகர்களுக்கு ஷாருக் கான் கொடுத்த பதிலும் ஷாருக் கானின் பதிலை குறிப்பிட்டு வாழ்த்திய தளபதி விஜயின் பதிவும் இதோ...
 

Congratulations on the blockbuster @iamsrk, @Atlee_dir and the entire #Jawan team!

Love you too @iamsrk sir https://t.co/yq5T2BOhz8

— Vijay (@actorvijay) September 27, 2023