ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஜெயம் ரவியின் முக்கிய படம்... பொங்கல் பரிசாக வந்த அட்டகாசமான GLIMPSE இதோ!

ஜெயம் ரவியின் இறைவன் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு,jayam ravi in iraivan movie first look poster out now | Galatta

தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக அடுத்தடுத்து நல்ல திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி கடைசியாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டில் வெளிவந்து இந்திய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, தமிழ்த் திரையுலகில் ஆல் டைம் ரெக்கார்டாக வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.
 
அடுத்ததாக இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் அகிலன் திரைப்படம் இந்த 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக பொன்னியின் செல்வன் பாகம் - 2 வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சைரன் மற்றும் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு புதிய படம் என அடுத்த திரைப்படங்களில் ஜெயம் ரவி நடித்த வருகிறார்.
 
இந்த வரிசையில் அடுத்ததாக ஜெயம் ரவியின் அடுத்த முக்கிய திரைப்படம் ஆக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த திரைப்படம் இறைவன். இயக்குனர் I.அஹ்மத் இயக்கத்தில் தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடிக்கும் இறைவன் திரைப்படத்திற்கு ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில், மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
 
PASSION STUDIOS சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் தயாரிக்கும் இறைவன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை நெட்லிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயம் ரவியின் ரசிகர்களுக்கு பொங்கல் பரிசளிக்கும் விதமாக தற்போது இறைவன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

#Iraivan First Look 🙏🏼🙂 pic.twitter.com/vnQeRGIkzU

— Jayam Ravi (@actor_jayamravi) January 15, 2023

தளபதி விஜயின் வாரிசு படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?  எடிட்டர் பிரவீன்KLன் பிரத்யேக பேட்டி இதோ
சினிமா

தளபதி விஜயின் வாரிசு படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகள் நீக்கப்பட்டது ஏன்?  எடிட்டர் பிரவீன்KLன் பிரத்யேக பேட்டி இதோ

எனக்கு திருப்தி இல்ல... அஜித்குமாரின் துணிவு பட சிறப்பு பேட்டியில் மனம் திறந்த மஞ்சுவாரியர்! வீடியோ இதோ
சினிமா

எனக்கு திருப்தி இல்ல... அஜித்குமாரின் துணிவு பட சிறப்பு பேட்டியில் மனம் திறந்த மஞ்சுவாரியர்! வீடியோ இதோ

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த வைரல் வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த வைரல் வீடியோ இதோ!