சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த வைரல் வீடியோ இதோ!

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்,sivakarthikeyan in maaveeran movie crew celebrated pongal | Galatta

தனக்கென தனி ஸ்டைலில் சின்னத்திரை வாயிலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக ரிலீஸான ப்ரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான புகைப்படங்கள் வெளிவர தயாராகி இருக்கின்றன. அந்த வகையில் முதலாவதாக இயக்குனர் R.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள சைன்ஸ் ஃபிக்ஷன் காமெடி திரைப்படமான அயலான் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

தொடரந்து உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.  இதனிடையே மண்டேலா திரைப்படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். 

சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் சரிதா, இயக்குனர் மிஷ்கின், பிரபல தெலுங்கு நடிகர் சுனில், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் மாவீரன் படத்திற்கு விது அய்யனா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, பரத் ஷங்கர் இசையமைக்கிறார். 

மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மாவீரன் படக்குழுவினர் பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளனர். சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மடோன் அஸ்வின் உட்பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட இந்த பொங்கல் கொண்டாட்டத்தின் வீடியோ தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோ இதோ…
 

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!🎋#Maaveeran #Mahaveerudu @Siva_Kartikeyan @AditiShankarofl @madonneashwin @ShanthiTalkies @Mee_Sunil @DirectorMysskin @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @saregamasouth @LokeshJey @DoneChannel1 @UrsVamsiShekar pic.twitter.com/PuiIXzLyzq

— Shanthi Talkies (@ShanthiTalkies) January 15, 2023

தனுஷின் வாத்தி தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா - அடுத்த அதிரடி பட மிரட்டலான அறிவிப்பு!
சினிமா

தனுஷின் வாத்தி தயாரிப்பாளர் உடன் கைகோர்க்கும் விஜய் தேவரகொண்டா - அடுத்த அதிரடி பட மிரட்டலான அறிவிப்பு!

ரெட் ஜெயன்ட் மூவீஸின் அடுத்த அசத்தல் ரிலீஸ்... பிக் பாஸ் கவின் டாடா பட கலக்கலான GLIMPSE வீடியோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவீஸின் அடுத்த அசத்தல் ரிலீஸ்... பிக் பாஸ் கவின் டாடா பட கலக்கலான GLIMPSE வீடியோ!

கீர்த்தி சுரேஷ்-தளபதி விஜயின் மேனேஜர் இணையும் அதிரடி படைப்பு… சூப்பர்ஹிட் கிளாசிக் பட டைட்டில் புதிய ஆக்சன் படம்!
சினிமா

கீர்த்தி சுரேஷ்-தளபதி விஜயின் மேனேஜர் இணையும் அதிரடி படைப்பு… சூப்பர்ஹிட் கிளாசிக் பட டைட்டில் புதிய ஆக்சன் படம்!