பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் அஜித் குமார் துணிவு... வசூல் நிலவரம் குறித்த அறிவிப்பு இதோ!

அஜித் குமாரின் துணிவு பட வட அமெரிக்க பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்,ajith kumar in thunivu movie box office details of north america | Galatta

இந்திய சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக, சினிமா ரசிகர்களின் அபிமான கதாநாயகர்களில் ஒருவராக திகழும் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் 2023 பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி இருக்கிறது. நேர்கொண்ட பார்வை & வலிமை ஆகிய படங்களின் வரிசையில் 3வது முறையாக அஜித்குமார் - போனி கபூர் - H.வினோத் - நீரவ்ஷா கூட்டணியில் துணிவு படம் தயாராகி இருக்கிறது.
 
அஜித் குமாருடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடித்துள்ள துணிவு திரைப்படத்தில், சமுத்திரக்கனி, ராஜதந்திரம் வீரா,  பிரபல பட்டிமன்ற பேச்சாளர் மோகனசுந்தரம், பால சரவணன், GM.சுந்தர், சிபி புவனச்சந்திரன், ஜான் கொக்கென், பிக் பாஸ் பாவணி, தர்ஷன், அமீர் மற்றும் மமதி சாரி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்ய, ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட கடந்த ஜனவரி 11-ம் தேதி ரிலீஸான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் பக்கா மாஸ் என்டர்டைனிங் திரைப்படமாக ரசிகர்களால் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக துணிவு திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் தற்போது துணிவு திரைப்படம் வட அமெரிக்காவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. இதுவரை 7 லட்சம் டாலர்கள் வசூலித்துள்ள துணிவு திரைப்படம் 8 லட்சம் என்ற இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் அஜித் குமாரின் திரைப்பயணத்தில் வட அமெரிக்காவில் அதிக வசூலித்த திரைப்படம் துணிவு தான் என்றும் தற்போது அதிகாரப்பூர்வமாக சரிகம சீனிவாஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அதிரடி அறிவிப்பு இதோ…
 

#Thunivu North America Comscore Reported gross has now officially crossed the $700K mark !! 💥💥

Surging towards $800K. Thala Ajith sir star power 🔥🔥🔥

CAREER HIGHEST GROSSER for Ajith Sir in North America already.#ThunivuPongal2023 #ThalaAjith @LycaProductions @Tentkotta pic.twitter.com/ABBCI95elM

— Sarigama Cinemas (@sarigamacinemas) January 14, 2023

எனக்கு திருப்தி இல்ல... அஜித்குமாரின் துணிவு பட சிறப்பு பேட்டியில் மனம் திறந்த மஞ்சுவாரியர்! வீடியோ இதோ
சினிமா

எனக்கு திருப்தி இல்ல... அஜித்குமாரின் துணிவு பட சிறப்பு பேட்டியில் மனம் திறந்த மஞ்சுவாரியர்! வீடியோ இதோ

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த வைரல் வீடியோ இதோ!
சினிமா

சிவகார்த்திகேயனின் மாவீரன் படக்குழுவின் பொங்கல் கொண்டாட்டம்... சர்ப்ரைஸாக வந்த வைரல் வீடியோ இதோ!

தந்தையுடன் படம் பார்த்து எமோஷ்னலான வாரிசு இயக்குனர் வம்சி... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!
சினிமா

தந்தையுடன் படம் பார்த்து எமோஷ்னலான வாரிசு இயக்குனர் வம்சி... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!