அருள்மொழி வர்மனின் மாஸ் என்ட்ரி... பொன்னியின் செல்வன் 2 FDFS பார்க்க குடும்பத்தோடு வந்த ஜெயம் ரவி! வைரல் வீடியோ

பொன்னியின் செல்வன் 2 FDFS பார்க்க குடும்பத்தோடு வந்த ஜெயம் ரவி,jayam ravi at fdfs of ponniyin selvan 2 movie with his family | Galatta

காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்தது பொன்னியின் செல்வன் 2. தமிழ் எழுத்தாளர்களிலேயே மிகவும் குறிப்பிடப்படும் எழுத்தாளராக தனது படைப்புகளால் மக்களின் மனதை வென்ற இயக்குனர் கல்கி அவர்களின் காலத்தால் அழியாத படைப்பாக உலக அளவில் புகழ்பெற்ற வரலாற்று புனைவு நாவலான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க எண்ணிய பல ஜாம்பவான்களும் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு கைவிட்ட நிலையில் அந்த அளவிற்கான ஈடு இணையற்ற படைப்பை விடாமுயற்சியோடு திரை வடிவமாக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஆல் டைம் ரெக்கார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது. எனவே பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இரண்டு மடங்காக ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்க, இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அற்புதமான ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் இன்னும் பிரம்மிப்பை கூட்பயுள்ளார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இன்று ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.இநநிலையில் பொன்னியின் செல்வன் 2 FDFS பார்ப்பதற்கு சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்கிற்கு நடிகர் ஜெயம் ரவி தனது குடும்பத்தாரோடு வந்து ரசிகர்களோடு படம் பார்த்தார். திரையரங்குக்குள் நுழையும்போதே அருள்மொழி வர்மன் போல் ஜெயம் ரவிக்கு ரசிகர்கள் ராஜமரியாதையோடு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…
 

பொன்னியின் செல்வன் படத்திற்கு அடித்தளமாக அமைந்த தளபதி பட பாடல்... உண்மையை உடைத்த தோட்டா தரணி! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

பொன்னியின் செல்வன் படத்திற்கு அடித்தளமாக அமைந்த தளபதி பட பாடல்... உண்மையை உடைத்த தோட்டா தரணி! ட்ரெண்டிங் வீடியோ இதோ

“நான் அழ மாட்டேன்!”- பொன்னியின் செல்வன் 2 பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எமோஷ்னலான த்ரிஷா! வைரல் வீடியோ
சினிமா

“நான் அழ மாட்டேன்!”- பொன்னியின் செல்வன் 2 பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எமோஷ்னலான த்ரிஷா! வைரல் வீடியோ

ARரஹ்மான் சாரின் மேஜிக்!- பொன்னியின் செல்வனில் தேவராளன் ஆட்டம் பாடலின் ரகசியங்கள் பகிர்ந்த இளங்கோ கிருஷ்ணன்! ஸ்பெஷல் வீடியோ
சினிமா

ARரஹ்மான் சாரின் மேஜிக்!- பொன்னியின் செல்வனில் தேவராளன் ஆட்டம் பாடலின் ரகசியங்கள் பகிர்ந்த இளங்கோ கிருஷ்ணன்! ஸ்பெஷல் வீடியோ