“நான் அழ மாட்டேன்!”- பொன்னியின் செல்வன் 2 பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் எமோஷ்னலான த்ரிஷா! வைரல் வீடியோ

பொன்னியின் செல்வன் 2 பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய த்ரிஷா,trisha gets emotional in ponniyin selvan 2 movie press meet | Galatta

எக்கச்சக்க எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக நாளை ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டத்தின் உச்சமாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாரான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்பாகி 500 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஆயிரம் கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவாகி இருக்கும் இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், பொன்னியின் செல்வன் எனும் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வல்லவரையன் வந்திய தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், சுந்தர சோழராக  பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, மதுராந்தகனாக ரஹ்மான், ரவி தாசனாக கிஷோர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக பட குழுவினர் இந்தியாவில் முக்கிய நகரங்களில் சுற்றி பயணம் மேற்கொண்டனர். இதில் ஓரிரு தினங்களுக்கு முன்பு ஜெயம் ரவி அவர்கள் எமோஷனலாகி கண் கலங்க, மற்றொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் கார்த்தியும் எமோஷனல் ஆனார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் - 2 திரைப்படத்திற்கான ப்ரொமோஷன் பணிகளின் கடைசி பத்திரிக்கையாளர் சந்திப்பு தற்போது நடைபெற்றது. இதில் பேசிய நடிகை திரிஷா, “சென்னையில் தொடங்கினோம் கடைசி நாள் இங்கேயே முடிகிறது ப்ரொமோஷன். ஏப்ரல் 28 எல்லாரும் போய் பாருங்கள்... சொல்லுங்கள் படத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று, ஷோபிதா குறிப்பிட்டது போல பயம் எதுவும் இப்போதைக்கு இல்லை... ரொம்ப பயங்கரமான ஒரு உற்சாகம் தான் இருக்கிறது. இன்றைக்கு யார் அழ போகிறார்கள்? யாரும் இல்லையா? நான் அழ மாட்டேன்... எல்லாவற்றுக்கும் மிக்க நன்றி... லைகா சுபாஷ்கரன் சார், தமிழ் குமரன் சார்… என்ன கேட்டாலும் இதுவரைக்கும் அவர்களிடமிருந்து இல்லை என்ற ஒரு வார்த்தை நான் கேட்டதில்லை. எப்போதுமே சரி என எல்லாம் கிடைக்கும். நடிகர்கள் நல்லபடியாக இருக்க வேண்டும் எல்லாம் நன்றாக போக வேண்டும்… படத்தின் நன்மைக்காக 100% கொடுத்திருக்கிறார்கள். மணி சார் ஐ லவ் யூ... தேங்க்யூ இதை எப்போதுமே நான் ஒரு நினைவாக மணிரத்னம் சாருடைய குந்தவை என சொல்லிக் கொள்வேன். ஒரு புதுமுக நடிகராக இருக்கட்டும் அல்லது ஒரு தேர்ந்த நடிகராக இருக்கட்டும் எல்லோருக்கும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது கனவாக இருக்கும். அப்படித்தான் நான் புதுமுக நடிகையாகவும் அவரிடம் நடித்தேன் இப்போது இருபது ஆண்டுகள் கழித்தும் நடித்திருக்கிறேன். நன்றி சார்…” என பேசிய த்ரிஷா படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரையும் குறிப்பிட்டு மனம் திறந்து பேசி உள்ளார். அந்த வீடியோ இதோ…
 

மரண மாஸ் நடனமாடி மேடையை அதிரவிட்ட செஃப் தாமு - செஃப் வெங்கடேஷ் பட்... ட்ரெண்டாகும் கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் அவார்ட் வீடியோ இதோ!
சினிமா

மரண மாஸ் நடனமாடி மேடையை அதிரவிட்ட செஃப் தாமு - செஃப் வெங்கடேஷ் பட்... ட்ரெண்டாகும் கலாட்டா டிஜிட்டல் ஸ்டார்ஸ் அவார்ட் வீடியோ இதோ!

ALL SET ரிலீசுக்கு ரெடியான பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து எமோஷனலான கார்த்தி! வைரலாகும் வீடியோ இதோ
சினிமா

ALL SET ரிலீசுக்கு ரெடியான பொன்னியின் செல்வன் 2 படம் குறித்து எமோஷனலான கார்த்தி! வைரலாகும் வீடியோ இதோ

இயக்குனராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனர்... சதீஷ் நடிக்கும் முதல் பட அசத்தலான டைட்டில் - மோஷன் போஸ்டர் இதோ!
சினிமா

இயக்குனராக களமிறங்கிய லோகேஷ் கனகராஜின் அசோசியேட் இயக்குனர்... சதீஷ் நடிக்கும் முதல் பட அசத்தலான டைட்டில் - மோஷன் போஸ்டர் இதோ!