“ஒரு மணி நேரத்தில் Sketch போட்டு கொடுத்தேன்..” பொன்னியின் செல்வன் கப்பல் உருவானவிதம் குறித்து தோட்டா தரணி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

பொன்னியின் செல்வன் கப்பல் உருவான விதம் விவரம் இதோ - Ponniyin selvan art director shared work experience with maniratnam | Galatta

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆரவார கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் 2’ தமிழ் சினிமாவின் மாபெரும் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுத்து சாத்தியமாக்கிய மணிரத்தினம் அவர்கள் இரண்டு பாகங்களாக இந்த படத்தை உருவாக்கி கடந்த ஆண்டு முதல் பாகத்தை வெளியிட்டார். ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவை பெற்று வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் சாதனை படைத்தது. முதல் பாகத்தை தொடர்ந்து இன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில்  மணிரத்தினம் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து, “மணி சாருக்கு எதவாது வித்யாசமா பண்ணி கொடுத்து அவருக்கு பிடித்து போன அவன் ரொம்ப சந்தோஷமாகிடுவார். அந்த மாதிரி ஸ்கெட்ச் போட்டு கொடுத்தா அவர் ரொம்ப ஆர்வமா ஆகிடுவாரு..  பாங்காக் 15 நாள் நாங்க என்ன சுத்துனமோ ஒரு 1 மணி நேரத்தில் எந்தெந்த ஊரில் என்னென்ன பன்னனும் னு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தேன். அவர் ரொம்ப ஆர்வமாகிட்டார்" என்றார்.

மேலும் தொடர்ந்து படத்தில் பயன்படுத்தப்பட்ட கப்பல்கள், படகுகள் குறித்து பேசுகையில், "மணி சார் படகு பற்றி சொல்லும் போது நான் ஒரு எண்ணம் கொண்டு வந்தேன். எனது பால்ய காலத்தில் மாயா பஜாரில் எடிட்டிங் அறைக்கு பக்கத்தில் ஒரு படகு இருந்தது. நான் அப்போது அடிக்கடி ங்கு சென்று பார்த்து போவேன்.‌ எனக்கு அந்த படகு என்றால் ரொம்ப பிடிக்கும். எனக்கு எல்லாவற்றில் மீதும் ஆர்வம் அதிகம். அதன்படி படகுகள். கப்பல்கள் புகைப்படங்கள் சிலவை காட்டினார். முதல்முதலாக வந்த கேனோ படகு அதன்பிறகு வந்த படகுகள் என்று நிறைய மாதிரிகள் காட்டினார்.புத்தகத்தில் கூட யூரோப்பியன் சாயலில் அந்த புத்தகம் குறித்து விளக்கமளித்திருப்பார்கள்..நான் முதலில் அதை உடைக்க வேண்டும் என்று நினைத்து தான் நான் அது போன்ற டிசைன் இல்லாத படகுகளை கொண்டு வந்தேன். இவர் அந்த சோழ சின்னம் எங்கு வைப்பது என்று கேட்டபோது நான் கப்பலின் முன்பக்கத்தில் புலி தலையை வைத்து கொடுத்தேன்.இது போன்ற பல விஷயங்கள் ஆய்வு செய்து முடித்து  கொடுத்தேன்.அது என் வேலை இதில் போற்றக்குரியது என்று இல்லை. அது என் கடமை. அதுக்குதான் வைத்திருக்கிறார்கள்." என்றார்.

மேலும் கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் பொன்னியின் செல்வன் படத்தின் கோட்டை உருவான விதம் மற்றும் மற்ற சில கலை வடிவங்கள் உருவான விதம் குறித்து பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட வீடியோ இதோ.

இதுவரை பார்க்காத காட்சிகளுடன் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படம்.. – ஒடிடியில் வெளியாகும் Director’s cut.. வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..
சினிமா

இதுவரை பார்க்காத காட்சிகளுடன் வெற்றிமாறனின் 'விடுதலை' திரைப்படம்.. – ஒடிடியில் வெளியாகும் Director’s cut.. வைரலாகும் அட்டகாசமான அப்டேட் இதோ..

அமெரிக்காவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம்.. வியந்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

அமெரிக்காவில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம்.. வியந்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..

“ஏன் தளபதி விஜய் அவர்களை சந்திக்க போகல..” ரசிகர்கரின் கேள்விக்கு எஸ் ஜே சூர்யாவின் பதில்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

“ஏன் தளபதி விஜய் அவர்களை சந்திக்க போகல..” ரசிகர்கரின் கேள்விக்கு எஸ் ஜே சூர்யாவின் பதில்.. - இணையத்தில் வைரலாகும் பதிவு இதோ..