மலேசியா வாழ் தமிழரான முகேன் ராவ் தமிழில் பல சுயாதீன பாடல்களை பாடியுள்ளார். பின்னர் தமிழக சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்தார் முகென் ராவ். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற முகேன் ராவ் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். இயக்குனர் கவின் இயக்கத்தில், ஸ்கை மேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் தயாரிப்பில் உருவாகும் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். 

வேலன் திரைப்படத்தில் முகென் ராவுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்க, பிரபு,ஹரீஷ் பரேடி,தம்பி ராமய்யா,சூரி,மரியா வின்சென்ட்,பிரிகிடா,ப்ராங்க் ஸ்டார் ராகுல்,பில்லி முரளி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வேலன் படத்தின் முதல் பாடலாக பாடகர் வேல் முருகன் குரலில் வெளியான டண்டணக்கா டண்டணக்கா தவுலடி பாடல் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வேலன் படத்தின் டீசர் வெளியானது. முகென் ராவ்-ன் வேலன் பட டீசரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.