கலர்ஸ் தமிழின் பெரிய வெற்றியடைந்த தொடர்களில் ஒன்று இதயத்தை திருடாதே நவீன் மற்றும் ஹிமா பிந்து இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.சேனலில் பெரிய வெற்றியடைந்த தொடர்களில் இதுவும் ஒன்று.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்த தொடரின் முதல் அத்தியாயம் நிறைவடைந்து, புதிய திருப்பங்களுடன் கொஞ்சம் மாறுபட்ட கதைக்களத்தோடு இரண்டாவது அத்தியாயம் தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசனிலும் நவீன் மற்றும் ஹிமா பிந்து இருவரும் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.இந்த தொடர் 1000 எபிசோடுகளை கடந்து பெரிய வெற்றி தொடராக மாறியுள்ளது.

தற்போது இந்த தொடரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்த தொடர் விரைவில் நிறைவுக்கு வருகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.பெரிய வெற்றியடைந்த இந்த தொடரின் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளது.இந்த சீரியலின் அடுத்த சீசன் விரைவில் வரவுள்ளதாகவும் தகவல் கிடைத்து வருகிறது.என்றாலும் பழைய ஜோடி மற்றும் நடிகர்களை மிஸ் செய்வோம் என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.