ஹிப் ஹாப் தமிழா ஆதியின் "வீரன்" திருவிழா கொண்டாட்டம்... சர்ப்ரைஸ் அறிவிப்பால் உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் படம் 3வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு,hiphop tamizha adhi in veeran movie 3rd single release date announcement | Galatta

ஹிப் ஹாப் தமிழா ஆதி சூப்பர் ஹீரோவாக கலக்கி இருக்கும் வீரன் திரைப்படத்திலிருந்து அடுத்த சர்ப்ரைஸ் அறிவிப்பு தற்போது வெளியானது. இந்த "வீரன் திருவிழா" கொண்டாட்டத்திற்காக தற்போது ரசிகர்களை பட குழுவினர் அலர்ட் செய்துள்ளனர். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராகவும் இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்களுக்கு மிகவும் ஃபேவரட் நப்சத்திரமாகவும் ஜொலிக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு 2K கிட்ஸ் மத்தியில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், தற்போது தனது அடுத்த புதிய திரைப்படமாக உருவாகும் PT Sir திரைப்படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சிலம்பரசன்.TR - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் PT Sir திரைப்படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே ஹிப்பாப் தமிழா ஆதி நடிப்பில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக வெளிவர தயாராக இருக்கிறது வீரன் திரைப்படம். முன்னதாக மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் ARK.சரவண் இயக்கத்தில் உருவாகும் வீரன் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, வீரன் திரைப்படத்திற்கு மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார். வீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 

பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட வருகிற ஜூன் 2ம் தேதி வீரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளிவந்த மின்னல் முரளி திரைப்படத்தை போல ஒரு வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகி இருக்கும் வீரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பும் வகையில் தயாராகி இருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது அடுத்த சர்ப்ரைஸாக வீரன் திருவிழா எனும் வீரன் படத்தின் மூன்றாவது பாடல் நாளை மே 29ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை அறிவிக்கும் வகையில் கலக்கலான புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டர் இதோ...
 

Get set for the 3rd single from #Veeran , Veeran Thiruvizha out Tomorrow ( May29 ) 5PM 💥🎊

Grand Worldwide Release On
JUNE 2@hiphoptamizha @ArkSaravan_Dir @saregamasouth @SakthiFilmFctry @SathyaJyothi pic.twitter.com/PBFAoyGXLh

— Hiphop Tamizha (@hiphoptamizha) May 28, 2023

கேன்ஸ் திரைப்பட விழாவில் காதல் மனைவியோடு கிளாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்!
சினிமா

கேன்ஸ் திரைப்பட விழாவில் காதல் மனைவியோடு கிளாஸ் என்ட்ரி கொடுத்த அட்லீ... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படங்கள்!

'அன்பான ரசிகர்களுடன்...!'- திருமண வரவேற்பில் மாஸ் என்ட்ரி கொடுத்த “லெஜண்ட்” சரவணன்... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!
சினிமா

'அன்பான ரசிகர்களுடன்...!'- திருமண வரவேற்பில் மாஸ் என்ட்ரி கொடுத்த “லெஜண்ட்” சரவணன்... ட்ரெண்டாகும் வீடியோ இதோ!

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் அடியே பட ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான வா செந்தாழினி பாடல் இதோ!
சினிமா

ஜீவி பிரகாஷ் குமார் - கௌரி கிஷனின் அடியே பட ஸ்பெஷல் ட்ரீட்… ரொமான்டிக்கான வா செந்தாழினி பாடல் இதோ!