பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் பட ட்ரைலரில் கவனிக்க வேண்டிய 10 தருணங்கள் - பட்டியல் இதோ..

பொன்னியின் செல்வன் 2 ட்ரைலரில் முக்கிய காட்சிகள் - Highlights from Ponniyin Selvan part 2 | Galatta

அதிக வாசகர்களை கொண்டு பல தசாப்தங்களாக நிலைத்து நிற்கும் உலக புகழ்பெற்ற அமரர் கல்கியின் வரலாற்று புனைவு கதையான பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க 80 களில் இருந்தே முயற்சிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த முயற்சிகளில் விடாமுயற்சியினையும் ஈடு இணையற்ற குறிக்கோளையும் கொண்டு படமாக கொடுத்தவர் இயக்குனர் மணிரத்னம்.  அதன்படி இரண்டு பாகங்களாக உருவான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி உலகளவில் வரவேற்பை பெற்றது. ரசிகர்களின் ஆரவாரத்தை பெற்று நாவலுக்கு இணையான வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 வெளியாகவுள்ள நிலையில் நேற்று சென்னையில் பிரமாண்டமாக இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.  டிரைலரில் ரசிகர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான தருணங்களின் சிறப்பு பட்டியல் இதோ..

ஆதித்ய கரிகாலன்

அருள் மொழி வர்மன் கடலில் மூழ்கி இறந்தான் என்ற செய்தியை கேட்டு அதிர்ந்து போன சோழ அரசை நோக்கி தன் தம்பியின் மரணத்திற்கு நந்தினி தான் காரணம் தான் என்று பட்டத்து இளவரசர் ஆதித்ய கரிகாலன் சோழ நாட்டை நோக்கி விரைந்து செல்வதாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் முடிவு பெரும். நீண்ட நாள் கழித்து சொந்த நாட்டுக்கு வராத பட்டத்து அரசன் ஆதித்ய கரிகாலனுக்கு கோலாகல வரவேற்பு அளிக்கும்படியான காட்சியாக இது இருக்க கூடும்.

viduthalai first review by red giant movies co producer m shenbagamoorthy

நந்தினியின் போர் தந்திரம்

நந்தினியின் அடுத்த இலக்காக இருக்கும் கரிகாலன் மரணத்திற்காக ஆபத்துதவி ரவிதாசன் மற்றும்  பாண்டிய நாட்டு வீரர்களுடன் ரகசிய கூட்டம் நடத்துகிறாள். இதில் பாண்டிய நாட்டு இளவரசருக்கு வாக்கு அளிக்கும் காட்சியும் இடம் பெறுகிறது.

viduthalai first review by red giant movies co producer m shenbagamoorthy

பாண்டிய நாட்டு மன்னனின் கடைசி ஆசை

ஆதித்ய கரிகாலனால் தாக்கப் பட்ட பாண்டிய மன்னன் நந்தினியிடம் தன் கடைசி ஆசையை சத்தியத்துடன் பெற்றுக் கொண்ட காட்சி

viduthalai first review by red giant movies co producer m shenbagamoorthy

நந்தினியின் பால்ய காலம்

தன் அண்ணன் பட்டது இளவரசர் ஆதித்ய கரிகாலன் ராஜ வம்சம் இல்லாத பெண்ணான நந்தினியை விரும்புவதை அறிந்து குந்தவை திட்டத்தின் படி குளந்தங்கரையில் இருந்து சோழ நாட்டு காவலர்களால் விரட்டியடிக்கப் படுகிறாள் பால்ய கால நந்தினி.

viduthalai first review by red giant movies co producer m shenbagamoorthy

மதுராந்தகன்

அரசு பதவி தலைகேறி சிவமாந்ததை துறந்த மதுராந்தகன் உண்மையை அறிந்தும் சோழ் நாட்டு மணிமுடியை பெறமுடியாத வெறியினால் சோழ நாட்டு மணிமுடியை பெற காளமுகர்களின்ஆதரவை பெறுவார் மதுராந்தகன். 

viduthalai first review by red giant movies co producer m shenbagamoorthy

ஆதித்ய கரிகாலன் – சிற்றரசர்கள்

சோழ நாட்டில் நடக்கும் சதி திட்டத்தை புரிந்துகொண்டு சிற்றரசர்களிடம் ஆக்ரோஷமாக பேசும் ஆதித்ய கரிகாலன்

viduthalai first review by red giant movies co producer m shenbagamoorthy

வந்திய தேவன் – நந்தினி

சதி திட்டத்தை புரிந்து கொண்டு நந்தினியை காண வந்த வந்திய தேவன். பின் ஆதித்ய கரிகாலன் அங்கு வருவதை கண்டு  திரை மறைவில் ஒளிந்து கொண்டு முக்கியமான காட்சியை பார்க்கும் காட்சி..

viduthalai first review by red giant movies co producer m shenbagamoorthy

 நந்தினியும் கரிகாலனும்

நீண்ட காலத்திற்கு பிறகு வஞ்சமும் காதலும் இடையே நந்தினியும் கரிகாலனும் சந்திக்கும் முக்கியமான காட்சி 

viduthalai first review by red giant movies co producer m shenbagamoorthy

குற்றத்திற்கு ஆளான வந்தியத்தேவன்

ஆதித்ய கரிகாலன் மரணத்திற்கு வந்திய தேவன் தான் காரணம் என்ற அனைத்து சாத்சியங்களிலும் அடிப்படையில் சோழ நாட்டு நீதி சபையில் வந்திய தேவன் நிற்கும் காட்சி

viduthalai first review by red giant movies co producer m shenbagamoorthy

வந்திய தேவன் – குந்தவை

அருள் மொழி வர்மன் சோழ நாட்டு பட்டத்து அரசராய் பதிவி ஏற்கவிருக்கும் தருணத்தில் குந்தவை வந்திய தேவனை பார்க்கும் காட்சி

viduthalai first review by red giant movies co producer m shenbagamoorthy

நிறைய நிறைய அற்புதங்களையும் எதிர்பாராத தருணங்களையும் உள்ளடக்கிய போன்னியினி செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க மணிரத்தினம் நிறைய மாறுதல்களை செய்துள்ளார். இந்த இரண்டாம் பாகத்திலும் உணர்வு பூர்வமான காட்சிகளை நிறைய கொடுத்துள்ளார் என்பது டிரைலர் மூலம் உறுதியாக தெரியவருகிறது. நிச்சயம் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய அளவு வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

“அவர் திரையில் அழும் போதெல்லாம் சிரிப்பு வரும்” மறைந்த நடிகர் விவேக் குறித்து ரமேஷ் கண்ணா – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“அவர் திரையில் அழும் போதெல்லாம் சிரிப்பு வரும்” மறைந்த நடிகர் விவேக் குறித்து ரமேஷ் கண்ணா – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

“வசனத்தில் சூரியன் லாம் நம்ம டச் பண்ண வேண்டாம்” ரஜினிகாந்த் குறித்து ரமேஷ் கண்ணா பகிர்ந்த மாஸ் தகவல்.. – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“வசனத்தில் சூரியன் லாம் நம்ம டச் பண்ண வேண்டாம்” ரஜினிகாந்த் குறித்து ரமேஷ் கண்ணா பகிர்ந்த மாஸ் தகவல்.. – முழு நேர்காணல் இதோ..

“நீங்க இல்லாமல் நான் இல்லை” ரசிகர்களுக்கு சிலம்பரசன் கொடுத்த  சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரல் வீடியோ இதோ..
சினிமா

“நீங்க இல்லாமல் நான் இல்லை” ரசிகர்களுக்கு சிலம்பரசன் கொடுத்த சர்ப்ரைஸ்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரல் வீடியோ இதோ..