பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவிற்காக புது உச்சம் தொட்ட ARரஹ்மான்... பிரம்மிப்பூட்டும் அசத்தலான அறிவிப்பு இதோ!

பொன்னியின் செல்வன் 2 பட இசை பணிகள் குறித்து ஏ ஆர் ரஹ்மான்,A r rahman shared about ponniyin selvan 2 audio launch mixing works | Galatta

மக்களின் மனதை வென்ற எழுத்தாளர்களில் ஒருவராக தமிழில் காலத்தால் அழியாத பல படைப்புகளை கொடுத்த கல்கி அவர்களின் காலத்தால் அழியாத படைப்பாக உலக அளவில் புகழ்பெற்றது பொன்னியின் செல்வன் நாவல். வரலாற்று புனைவு நாவலான இந்த பொன்னியின் செல்வன் நாவலுக்கு உலகெங்கும் பல கோடி ரசிகர்கள் உண்டு. இந்த நாவலை படமாக எண்ணி தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான்களும் எண்ணற்ற முயற்சிகளை மேற்கொண்டு கைவிட்ட நிலையில் இந்த மாபெரும் படைப்பை விடாமுயற்சியோடு திரை வடிவமாக்கியவர் தான் இயக்குனர் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர்.

ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அற்புதமான ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் ஆல் டைம் ரெக்கார்டாக 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்தது தொடந்து பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.

முன்னதாக இன்று மார்ச் 29ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவிற்காக தனது இசை கோர்ப்பில் பணியாற்றியது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "பொன்னியின் செல்வன் 2 படத்திற்காக தளராது பணியாற்றிய என்னுடைய மிக்சிங் இன்ஜினியர்களுக்கு பாராட்டுகள், இன்றைய இசை வெளியீட்டு விழாவிற்காக 35 மாஸ்டர்களை டெலிவரி செய்துள்ளனர்." என குறிப்பிட்டு ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டுள்ளார். இசை வெளியீட்டு விழாவிற்கே இத்தனை பணிகள் என்றால் மொத்த படத்தில் இன்னும் எத்தனை எத்தனை மாயாஜாலங்களை ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திருப்பார் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். அந்த பதிவு இதோ…

 

#ps2 kudos to my relentless mixing engineers for delivering over 35 masters for today’s audio release #tamil #telugu #kannada #malayalam and #hindi #sleeplessnights #commitment #passionate

— A.R.Rahman (@arrahman) March 29, 2023

“பொன்னியின் செல்வன் நாவல் போல் இல்லையே” என்ற விமர்சனத்திற்கு அட்டகாசமாக பதிலளித்த எழுத்தாளர் ஜெயமோகன் – முழு நேர்காணல் இதோ..
சினிமா

“பொன்னியின் செல்வன் நாவல் போல் இல்லையே” என்ற விமர்சனத்திற்கு அட்டகாசமாக பதிலளித்த எழுத்தாளர் ஜெயமோகன் – முழு நேர்காணல் இதோ..

சிலம்பரசன்TRன் பக்கா மாஸ் பத்து தல பட அடுத்த அதிரடி சர்ப்ரைஸ்... வெயிட்டாக வந்த ஒசரட்டும் பத்து தல பாடல் இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் பக்கா மாஸ் பத்து தல பட அடுத்த அதிரடி சர்ப்ரைஸ்... வெயிட்டாக வந்த ஒசரட்டும் பத்து தல பாடல் இதோ!

பொன்னியின் செல்வன் 2 படத்துடன் கைகோர்த்த வாரிசு தயாரிப்பாளர்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான புது அறிவிப்பு இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 2 படத்துடன் கைகோர்த்த வாரிசு தயாரிப்பாளர்... ரிலீஸ் பற்றிய அட்டகாசமான புது அறிவிப்பு இதோ!