உச்சகட்ட பிரம்மாண்டத்தில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2… ரசிகர்களை மிரள வைக்கும் மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட ட்ரெய்லர் வெளியீடு,mani ratnam in ponniyin selvan 2 movie trailer out now | Galatta

உலக அளவில் மிகப்பெரிய புகழை எட்டிய தமிழ் நாவல்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் நாவல் ஒரு வரலாற்றுப் புனைவு நாவல் ஆகும். புகழ்மிக்க எழுத்தாளர் அமரர் கல்கி அவர்களின் அசாத்திய கற்பனையில் வரலாற்றைச் சரிவர சேர்த்து ஈடு இணையற்ற வரலாற்று புனைவு நாவலாக வெளிவந்த இந்த பொன்னியின் செல்வனை திரை வடிவமாக்க தமிழ் சினிமாவில் எத்தனையோ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த முயற்சிகளில் அதிக முயற்சி கண்ட இயக்குனர் மணிரத்னம் அவர்கள் தனது விடாமுயற்சியின் பலனாக பொன்னியின் செல்வனை திரை வடிவமாக்கி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.கல்கியின் இந்த பொன்னியின் செல்வன் நாவல் மக்களின் இதயங்களை கொள்ளையடிக்க மிக முக்கிய காரணம் அதன் கதாபாத்திரங்கள். 

அந்த வகையில் ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இரண்டு பாகங்களாக தயாரான இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் ரிலீஸாகி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியது. ஆல் டைம் ரெகார்டாக 500 கோடிக்கு மேல் வசூலித்த பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. தொழில்நுட்ப ரீதியில் மிக வலுவான தொழில்நுட்ப கலைஞர்களின் படையின் கடின உழைப்பில் பொன்னியின் செல்வன் தயாராகியுள்ளது. அந்த வகையில் கலை இயக்குனராக தோட்டா தரணியையும் ஒளிப்பதிவாளராக ரவிவர்மனும் படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்ற, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சேர்த்துள்ளார்.

இதனிடையே இன்று மார்ச் 29ஆம் தேதி தற்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. இதுவரை இந்திய திரை உலகம் கண்டிராத பிரம்மாண்டத்தின் உச்சமாக அட்டகாசமான கலைப்படைப்பாக வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களை அதிர வைத்துள்ளது. மிரள வைக்கும் அந்த பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர் இதோ…
 

என்னை பாதித்தது, அவரை கவர்ந்தது... வெற்றிமாறன் விடுதலை படம் எடுக்க காரணம் என்ன?- உண்மையை உடைத்த ஜெயமோகனின் சிறப்பு பேட்டி இதோ!
சினிமா

என்னை பாதித்தது, அவரை கவர்ந்தது... வெற்றிமாறன் விடுதலை படம் எடுக்க காரணம் என்ன?- உண்மையை உடைத்த ஜெயமோகனின் சிறப்பு பேட்டி இதோ!

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி CAMEO-வா? வாத்தியார் கதாபாத்திரம் உருவானது எப்படி?- ரகசியத்தை உடைத்த ஜெயமோகன்!
சினிமா

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் விஜய் சேதுபதி CAMEO-வா? வாத்தியார் கதாபாத்திரம் உருவானது எப்படி?- ரகசியத்தை உடைத்த ஜெயமோகன்!

பொன்னியின் செல்வன் 1க்கும் - 2க்கும் இடையே பேரிழப்பை குறிக்க இவ்வளவு பெரிய மாற்றமா? ரசிகர்களை கவனிக்க வைக்கும் புதிய போஸ்டர் இதோ!
சினிமா

பொன்னியின் செல்வன் 1க்கும் - 2க்கும் இடையே பேரிழப்பை குறிக்க இவ்வளவு பெரிய மாற்றமா? ரசிகர்களை கவனிக்க வைக்கும் புதிய போஸ்டர் இதோ!