கமல் ஹாசன் தயாரிக்கும் அடுத்த பெரிய திரைப்படம்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான வீடியோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ..

கமல்ஹாசன் தயாரிப்பில் அடுத்து உருவாகும் பெரிய திரைப்படம் அப்டேட் இதோ - Kamal haasan RKFI 56th Project Update | Galatta

கமல் ஹாசன் ஒரு நடிகர், இயக்குனர் ஒரு திரைத்துறையின் களஞ்சியம் என்று சொல்லிக் கொண்டே போகலாம் அதே நேரத்தில் அவர் சிறந்த தயாரிப்பாளரும் கூட. 1981 கமல் ஹாசனின் 100 வது திரைப்படமான ‘ராஜ பார்வை’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக ‘ராஜ் கமல் இன்டர்நேஷனல்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் அறிமுகமாகி இதுவரை 50 க்கும் மேற்பட்ட பல ஹிட் படங்களை தயாரித்துள்ளார் கமல் ஹாசன். மேலும் திரைப்படங்களையும் விநியோகித்தும் வருகிறார். இடையே படங்களை தயாரிப்பதில் குறைத்து கொண்ட கமல் ஹாசன். நீண்ட நாள் கழித்து சமீபத்தில் இவர் தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அட்டகாசமாக வெளியான திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை கொண்டு மிகப்பெரிய இமாலாய வெற்றி பெற்றது. 1986 ல் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படமும் தயாரித்தது கமல் ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான விக்ரம் வெற்றியையடுத்து திரைத்துறையில் மீண்டும்  கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் சாய் , பல்லவி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கவுள்ளார் கமல் ஹாசன். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

இந்நிலையில் ராஜ் கமல் பிலிம்ஸ் தனது 56 படம் தயாரிப்பு குறித்த அறிவிப்பை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் நாளை மாலை 6.30 மணியளவில் அதுகுறித்த அப்டேட் வரும் என்று இரத்தம் மற்றும் போர் என்ற தலைப்பில் நெருப்புடன் இருக்கும் வாள் இருக்கும் வீடியோ வெளிய்ட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

See you on the battlefield at 6.30 pm tomorrow. #BLOODandBATTLE#RKFIProductionNo_56 #Ulaganayagan #KamalHaasan @ikamalhaasan #Mahendran @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/4KFZGSXbxS

— Raaj Kamal Films International (@RKFI) March 8, 2023

இப்படத்தில் சிலம்பரசன் TR கதாநாயகனாக நடிக்கவிருப்பதாகவும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ பட இயக்குனர் தேசிங்கு பெரிய சாமி இயக்கவுள்ளார் என்றும் மேலும் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.  அல்லது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏற்கனவே அறிவித்த படத்தின் அப்டேட்டாக இருக்கும் என்றும் சிலர் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் அது சிலம்பரசன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

விஷால் - SJசூர்யாவின் மாஸ் கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி... செல்வராகவனின் பிறந்தநாள் பரிசாக வந்த மிரட்டலான GLIMPSE இதோ!
சினிமா

விஷால் - SJசூர்யாவின் மாஸ் கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி... செல்வராகவனின் பிறந்தநாள் பரிசாக வந்த மிரட்டலான GLIMPSE இதோ!

சிரித்த முகத்துடன் சிவகார்த்திகேயனை வரவேற்ற கல்யாண வீடு.. - வைரலாகும் SK வின் மாஸ் என்ட்ரி வீடியோ..
சினிமா

சிரித்த முகத்துடன் சிவகார்த்திகேயனை வரவேற்ற கல்யாண வீடு.. - வைரலாகும் SK வின் மாஸ் என்ட்ரி வீடியோ..

“கப்பல கட்டி ரிவர்ஸ் வர சொல்றாருங்க...” அகிலன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் – ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

“கப்பல கட்டி ரிவர்ஸ் வர சொல்றாருங்க...” அகிலன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் – ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..