மகளிர் தினத்தையொட்டி அனுஷ்கா நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் Surprise Glimpse.. ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

அனுஷ்காவின் புதிய படத்தின் மகளிர் தின போஸ்டர் வைரல் - Anushka Shetty new movie womens day special poster | Galatta

தென்னிந்தியாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா ஷெட்டி. தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ‘அருந்ததி’ படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். முன்னதாக தமிழில் ரெண்டு படத்தின் மூலம் அறிமுகமானாலும் அருந்ததி படம் தான் அனுஷ்காவிற்கு புகழை தேடி கொடுத்தது. அதன் பின் தொடர்ந்து தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். குறிப்பாக தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ‘லிங்கா’, தளபதி விஜயுடன் ‘வேட்டைக்காரன்’, அஜித் குமாருடன் ‘என்னை அறிந்தால்’ மற்றும் சூர்யாவுடன் சிங்கம் 1 ,2,3 ஆகிய படங்களிலும் நடித்து தமிழில் முன்னணி நடிகையானார். இதனுடன் மேலும் கதாநாயகி மையப்படுத்திய கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து அனுஷ்கா ரசிகர்களை கவர்ந்தார்.

குறிப்பாக உலகபுகழ் பெற்ற இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பான் இந்திய திரைப்படமாக கடந்த 2015 ல் வெளியான பாகுபலி முதல் பாகம், 2017 ல் வெளியான பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்து மேலும் உச்சம் தொட்டார் அனுஷ்கா ஷெட்டி. இவர் கடைசியாக கடந்த 2020 ல் நிசப்தம் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் அனுஷ்கா வெள்ளித்திரையில் களம் இறங்கியுள்ளார்.

UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மகேஷ் பாபு இயக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘அனுஷ்கா 48’ என்று பெயரிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. இப்படத்தின் அப்டேட் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி வைரலானது. மீண்டும் வெள்ளித்திரையில் ரசிகர்களின் கனவு கன்னி அனுஷ்கா வருவதையொட்டி ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.  அதன்படி இப்படத்திற்கு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்று பெயரிட்டு முதலில் ஒரு போஸ்டர் வெளியாகி வைரலானது. தற்போது மகளிர் தினத்தையொட்டி மீண்டும் ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

View this post on Instagram

A post shared by AnushkaShetty (@anushkashettyofficial)

இதனையடுத்து அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.இப்படத்தில் ‘ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா ஆத்ரேயா’ மற்றும் ‘ஜாதி ரத்தினலு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த நடிகர் நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்திற்கு அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ரதன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் - SJசூர்யாவின் மாஸ் கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி... செல்வராகவனின் பிறந்தநாள் பரிசாக வந்த மிரட்டலான GLIMPSE இதோ!
சினிமா

விஷால் - SJசூர்யாவின் மாஸ் கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி... செல்வராகவனின் பிறந்தநாள் பரிசாக வந்த மிரட்டலான GLIMPSE இதோ!

சிரித்த முகத்துடன் சிவகார்த்திகேயனை வரவேற்ற கல்யாண வீடு.. - வைரலாகும் SK வின் மாஸ் என்ட்ரி வீடியோ..
சினிமா

சிரித்த முகத்துடன் சிவகார்த்திகேயனை வரவேற்ற கல்யாண வீடு.. - வைரலாகும் SK வின் மாஸ் என்ட்ரி வீடியோ..

“கப்பல கட்டி ரிவர்ஸ் வர சொல்றாருங்க...” அகிலன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் – ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

“கப்பல கட்டி ரிவர்ஸ் வர சொல்றாருங்க...” அகிலன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் – ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..