விஷாலின் மார்க் ஆண்டனி படக்குழு வெளியிட்ட Surprise Glimpse.. – வைரலாக்கி வரும் ரசிகர்கள்.. அட்டகாசமான வீடியோ இதோ..

மார்க் ஆண்டனி படக்குழுவினர் வெளியிட்ட சிறப்பு வீடியோ வைரல் - Here is the Motion poster poster of Vishal Mark antony | Galatta

சமகால நடிகர்களில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால் அட்டகாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்து ஆக்ஷன் ஹீரோவாக தற்போது வலம் வருகிறார். நடிகராக மட்டுமல்லாமல் பட தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் தற்போது விஷால்  இயக்குனராகவும் துப்பறிவாளன் 2  படத்தில் பணியாற்றி வருகிறார். 

தற்போது விஷால் நடிப்பில் அட்டகாசமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. திரிஷா இல்லன்னா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் மற்றும் பகீரா ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பிரபல தெலுங்கு இயக்குனர் சுனில் மற்றும் இயக்குனர் செல்வராகவன் நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். மினி ஸ்டுடியோ வினோத்குமார் தயாரிப்பில் 60களின் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கிறார்.

பிரம்மாண்டமாக உருவாகி வரும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு மிக மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இருந்தும் படப்பிடிப்பு தடைபடாமல் முழு வீச்சுடன் நடைபெறுகிறது.

இந்நிலையில் அன்னை வேளாங்கன்னி கல்லூரி மகளிர் தின கொண்டாட்ட விழாவில் நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர் இதனுடன் மார்க் ஆண்டனி படத்தின்  மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். மேலும் அதனை படக்குழுவினர் தங்களது வலைபக்கத்தில் பதிவிட்டு வந்தனர். படம் வித்யாசமான Sci Fi திரைப்படமாக அமையும் என்று அறிவித்துள்ளனர் படக்குழுவினர். இதனையடுத்து ரசிகர்கள் மோஷன் போஸ்டரை அதிகளவு பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். 

Welcome to the retro music world of #MarkAntony

Proudly presenting #MarkAntonyMotionPoster https://t.co/sU8tkcKsyS

— Vishal (@VishalKOfficial) March 8, 2023

“என் இனிய நண்பர்” முதல்வர் குறித்து சுவாரஸ்யமான பேச்சு.. - புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..
சினிமா

“என் இனிய நண்பர்” முதல்வர் குறித்து சுவாரஸ்யமான பேச்சு.. - புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..

‘அசுரன்’ சிவசாமி கெட்டப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் – வைரலாகும் பா ரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் படத்தின் Glimpse இதோ..
சினிமா

‘அசுரன்’ சிவசாமி கெட்டப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் – வைரலாகும் பா ரஞ்சித் தயாரிக்கும் தண்டகாரண்யம் படத்தின் Glimpse இதோ..

'பிச்சைக்காரன் 2' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் புதிய படம் ரிலீஸ் தேதி அப்டேட்.. - வைரலாகும் அட்டகாசமான போஸ்டர் இதோ..
சினிமா

'பிச்சைக்காரன் 2' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனியின் புதிய படம் ரிலீஸ் தேதி அப்டேட்.. - வைரலாகும் அட்டகாசமான போஸ்டர் இதோ..