விஷால் - SJசூர்யாவின் மாஸ் கேங்ஸ்டர் மார்க் ஆண்டனி... செல்வராகவனின் பிறந்தநாள் பரிசாக வந்த மிரட்டலான GLIMPSE இதோ!

செல்வராகவனின் பிறந்தநாள் பரிசாக வந்த மார்க் ஆண்டனி பட புது போஸ்டர்,mark antony movie special birthday poster for selvaragavan | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். தொடர்ந்து தனக்கே உரித்தான பாணியில் ஆக்சன் பிளாக் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் வெளிவந்த திரைப்படம் லத்தி. காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்த லத்தி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் விரைவில் லண்டனில் தொடங்கும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார். 

இதனிடையே விஷால் மற்றும் SJ.சூர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ரிது வர்மா, இயக்குனர் செல்வராகவன், புஷ்பா படத்தில் மிரட்டலாக நடித்த பிரபல தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, Y.gee.மகேந்திரன், ரெட்டின் கிங்ஸ்லி, அபிநயா மற்றும் மலேசிய நடிகர் DSG உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மினி ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்க, 1960களில் நடைபெறும் கதை களத்தை மையமாக கொண்ட கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகிறது. அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்யும் மார்க் ஆண்டனி படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரபூர்வமாக்க படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தற்போது மார்க் ஆண்டனி படக் குழுவினர் ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக தனக்கே உரித்தான பாணியில் பல வித்தியாசமான கதைக்களங்களில் நல்ல படைப்புகளை கொடுத்து ரசிகர்களின் இதயங்களில் தனக்கென தனி இடம் பிடித்த இயக்குனர் செல்வராகவன் அவர்கள் இன்று மார்ச் 5ம் தேதி தனது 46 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை இயக்குனர் செல்வராகவன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது. மேலும் பல கோடி ரசிகர்களும் பிரபலங்களும் கலைஞர்களும் இயக்குனர் செல்வராகவன் அவர்களுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மார்க் ஆண்டனி படக்குழுவினர், மார்க் ஆண்டனி திரைப்படத்தில் செல்வராகவன் நடித்துள்ள சிரஞ்சீவி கதாபாத்திரத்தின் அதிரடியான போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிரஞ்சீவி செல்வராகவன் சார் என்னுடைய வாத்தியார். படப்பிடிப்பு தளத்தில் உங்களோடு இணைந்து பணியாற்றும் ஒவ்வொரு நாட்களையும் நேசிக்கிறேன் சார். என்னைப் போன்ற செல்வராகவன் சாருடைய ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கப் போகிறது. மார்க் ஆண்டனி உலகத்தில் இருந்து வாழ்த்துக்கள்." எனக் குறிப்பிட்டு அந்த அசத்தலான போஸ்டரை பகிர்ந்துள்ளார். சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த அந்த போஸ்டர் இதோ…
 

Happy Birthday Chiranjeevi @selvaraghavan sir my master.Loved working with u each day on sets sir! Will be a new experience for all selva sir fans like me,Wishes from the world of #MarkAntony @VishalKOfficial @iam_SJSuryah @vinod_offl@gvprakashpic.twitter.com/ybJ11HaxfJ

— Adhik Ravichandran (@Adhikravi) March 5, 2023

அடுத்த Vibe க்கு தயாராகுங்கள் மக்களே.. 'வா வாத்தி' பாடலை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் இசையில் புது பாடல்.. -  வைரல் பதிவு இதோ..
சினிமா

அடுத்த Vibe க்கு தயாராகுங்கள் மக்களே.. 'வா வாத்தி' பாடலை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் இசையில் புது பாடல்.. - வைரல் பதிவு இதோ..

AGR பராக்...பராக்..! சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் டீசர் அப்டேட்.. -  உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

AGR பராக்...பராக்..! சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் டீசர் அப்டேட்.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அப்டேட் இதோ..

“பஹீரா திரைப்படம் மன்மதன் படம் போல இருக்கே..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்  - முழு வீடியோ இதோ..
சினிமா

“பஹீரா திரைப்படம் மன்மதன் படம் போல இருக்கே..” விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் - முழு வீடியோ இதோ..