கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான Glimpse.. வைரலாகி வரும் பதிவு இதோ..

வைரலாகும் இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படம் - AdityaRam Chairman Meets Ulaganayagan Kamal Haasan | Galatta

உலகநாயகன் கமல் ஹாசன் பல தசாப்தங்களாக சினிமாவை ரத்தமும் சதையுமாய் பாவித்து வருகிறார். அதன் மூலம் பல படங்களில் நடித்தும் தயாரித்தும் இயக்கியும் என்று பல்துறைகள் மூலம் ரசிகர்களை உற்சாகப் படுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்று இந்திய அளவில் கவனம் பெற்றது. அதை தொடர்ந்து தற்போது கமல் ஹாசன் மணிரத்னம், எச் வினோத், பா ரஞ்சித், வெற்றி மாறன் ஆகியோருடன் பயனிக்கவுள்ளார். இதனிடையே கமல் ஹாசன் தற்போது நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2.

இந்திய சினிமாவே எதிர்பார்த்து கொண்டு இருக்கும் திரைப்படம் உலகநாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் உடன் இணைந்து சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால். பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைத்து வருகிறார். . லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் அட்டகாசமாக உருவாகி வரும் இப்படம் மிகப் பெரிய அளவு எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் கொண்டிருக்கிறது.சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல தடைகளினால் நிறைவடையாமலே இருந்தது. பல முயற்சிகளினால் தற்போது இந்தியன் 2 திரைப்படம் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. உலகநாயகன் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின் கமல் ஹாசன் நடித்து வரும் இப்படத்திற்கு தனி எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இதுமட்டுமல்லாமல் கடந்த 1996 ல் வெளியான ‘இந்தியன்’ படத்தை நீண்ட இடைவெளிக்கு பின் இரண்டாம் பாகமாக உருவாகும் ஆச்சர்யமும் கலந்துள்ளதால் ரசிகர்களிடம் தனி எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

முன்னதாக ஆந்திரா மற்றும் தெலுங்கான பகுதிகளில் மிக மும்முரமாக நடைபெற்று வந்த இந்தியன் 2 திரைப்படம் தற்போது சென்னையில் ஆதித்யா ராம் படபிடிப்பு தளத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக பிரபல தொழிலதிபரும் ஆதித்ய ராம் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் தலைவருமான ஆதித்யா ராம் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கமல் ஹாசனை சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அந்த பதிவு ரசிகர்களால்  இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியன் 2 திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் உலகெங்கிலும் பான் இந்திய திரைப்படமாக  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

A post shared by ADITYARAM (@adityaram_chairman)

“கப்பல கட்டி ரிவர்ஸ் வர சொல்றாருங்க...” அகிலன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் – ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

“கப்பல கட்டி ரிவர்ஸ் வர சொல்றாருங்க...” அகிலன் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் – ஜெயம் ரவி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

அடுத்த Vibe க்கு தயாராகுங்கள் மக்களே.. 'வா வாத்தி' பாடலை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் இசையில் புது பாடல்.. -  வைரல் பதிவு இதோ..
சினிமா

அடுத்த Vibe க்கு தயாராகுங்கள் மக்களே.. 'வா வாத்தி' பாடலை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் இசையில் புது பாடல்.. - வைரல் பதிவு இதோ..

AGR பராக்...பராக்..! சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் டீசர் அப்டேட்.. -  உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

AGR பராக்...பராக்..! சிலம்பரசனின் ‘பத்து தல’ படத்தின் டீசர் அப்டேட்.. - உற்சாகத்தில் ரசிகர்கள்.. வைரலாகும் அப்டேட் இதோ..