‘லியோ’ முதல் ‘தலைவர் 170’ வரை.. அடுத்தடுத்த பெரிய படங்களில் இணையும் அனிருத் – பக்காவான பட்டியல்.. விவரம் இதோ..

அனிருத் இசையமைக்கவிருக்கும் அட்டகாசமான படங்களின் பட்டியல் - Anirudh upcoming big movies list | Galatta

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இசையமைப்பாளர் அனிருத். கடந்த 2012 தனுஷ் படமான ‘3’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகினார். முதல் படத்திலே மிகப்பெரிய கவனம் பெற்று ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடல் மூலம் உலகளவில் பிரபலமடைந்தார்.  அதன் பின் தனது புதுமையான புத்துணர்ச்சியான பாடல்கள் மூலம் கவனம் பெற்று பாராட்டுகளை பெற தொடங்கினார். பின் தொடர்ந்து ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்று முன்னணி திரைபிரபலங்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவையே தன் இசையின் மூலம் ஆண்டு கொண்டிருக்கிறார் அனிருத்.

அனிருத் ஒரு படத்தில் இசையமைத்தாலே அந்த படம் ஹிட் என்று ஒரு பிம்பம் உருவாகியுள்ளது அந்த அளவு அனிருத் தன் தனித்துவமான திறமையினால் வளர்ந்துள்ளார். தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் அனிருத் புகழ் ஓங்கி கொண்டே உள்ளது. மேலும் தமிழ் பாடல்கள் மற்ற மொழியில் டப் செய்யப்பட்டாலும் அதுவும் டிரெண்ட் ஆவது வாடிக்கையாக உள்ளது. அதன்படி தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் அனிருத்.  வரும் காலங்களில் அவர் இசையமைக்கவுள்ள திரைப்படங்களின் பட்டியல் குறித்த சிறப்பு கட்டுரை இதோ..

 

லியோ

'கத்தி', 'பீஸ்ட்', 'மாஸ்டர்' என்று ஆல்பம் ஹிட் கொடுத்த தளபதி விஜய் – அனிருத் கூட்டணி மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளது. விஜய் அனிருத் கூட்டணியில் உருவாகும் பின்னணி இசைக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.  முன்னதாக லியோ படத்திலிருந்து அட்டகாசமான முன்னோட்டம் வெளியானது அதில் அனிருத் இசையில் ஒலிக்கும் ஆங்கில பாடல் ரசிகர்களை கவர்ந்து வைரலானது. நிச்சயம் இந்த படத்தின் பாடல்கள், பின்னணி இசை மிகப்பெரிய அளவில் கவனம் பெரும்..

jyothika bollywood re entry with big bollywood star movie teaser goes viral

ஜெயிலர்

பொதுவாகவே அனிருத் ரஜினிகாந்த் தீவிர ரசிகர். அதன் படி ரஜினிகாந்த் பேட்ட படத்தில் இணைந்த அனிருத் அட்டகாசமான பாடல்களையும் மிரட்டலான பின்னணி இசையையும் கொடுத்தார். பக்கா ரஜினி திரைப்படமாக 'பேட்ட' திரைப்படம் அமைந்ததற்கு பெரும் காரணமாக அனிருத் பின்னணி இசை ஒரு காரணம். அதன்படி தொடர்ந்து இந்த கூட்டணி 'தர்பார்' படத்தில் இணைந்தது. இந்த படத்திலும் அனிருத் இசை பேசப்பட்டது. தற்போது இந்த வெற்றி கூட்டணி இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்துள்ளது. முன்னதாக இரண்டு முன்னோட்டங்களில் அனிருத் இசை மிகப்பெரிய அளவு பேசப்பட்டது.

jyothika bollywood re entry with big bollywood star movie teaser goes viral

இந்தியன் 2

உலகநாயகன் கமல் ஹாசன் இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. இரு பெரும் ஜாம்பவான்களுடன் அனிருத் இணையும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த படத்திற்கு முன்பே கமல் ஹாசன் அனிருத் கூட்டணியில் ’விக்ரம்’ வெளியானது. மிகப்பெரிய அளவு வெற்றி பெற்ற விக்ரம் படத்தின் பின்னணி இசை வைரலானது. இதனால் இந்தியன் 2 திரைப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

jyothika bollywood re entry with big bollywood star movie teaser goes viral

ஜவான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கவிருக்கும் திரைப்படம் ‘ஜவான்’ இப்படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.  தமிழில் வெற்றி பெற்ற இருவரும் இந்தியில் ஒன்றாக  களம் இறங்குவது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. முன்னதாக படத்தின் முன்னோட்டம் வெளியாகி இந்திய அளவு அனிருத் இசை வைரலானது.

jyothika bollywood re entry with big bollywood star movie teaser goes viral

ஜூனியர் என்டிஆர்

ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கோரட்டல்லா சிவா இயக்கி வரும் ‘NTR30’ திரைப்படத்தில்  அனிருத் இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே தெலுங்கில் சில படங்களுக்கு இசையமைத்து அங்கும் ரசிகர்களை சேர்த்துள்ளார் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது. பான் இந்திய திரைப்படமாக உருவாகவுள்ள NTR30 திரைப்படத்தில் அனிருத் இசை எவ்வாறு இருக்கும் என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

jyothika bollywood re entry with big bollywood star movie teaser goes viral

தலைவர் 170

மீண்டும் ரஜினியுடன் இணையவுள்ளார் அனிருத். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள ‘தலைவர்  170’ திரைப்படத்தை ஜெய்பீம் இயக்குனர் ‘தசெ ஞானவேல் இயக்கவுள்ளார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். பேட்ட, தர்பார், ஜெயிலர் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினிகாந்த் படத்தில் இணைந்துள்ளார் அனிரூத். நிச்சயம் ரசிகர்களீன் எதிர்பார்ப்பை தாண்டி இசை மற்றும் பாடல்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

jyothika bollywood re entry with big bollywood star movie teaser goes viral

மீண்டும் லைகாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. ‘தலைவர் 170’ படத்தை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர்.. - வைரலாகும் அறிவிப்பு இதோ..
சினிமா

மீண்டும் லைகாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. ‘தலைவர் 170’ படத்தை இயக்கவிருக்கும் பிரபல இயக்குனர்.. - வைரலாகும் அறிவிப்பு இதோ..

இனம், மதம், நாடு என்று சர்ச்சையை கிளப்பிய திருமண ஆடை.. அவதூறு பேசியவர்களுக்கு பதிலடி – பாகிஸ்தான் நடிகையின் பதிவு வைரல்..
சினிமா

இனம், மதம், நாடு என்று சர்ச்சையை கிளப்பிய திருமண ஆடை.. அவதூறு பேசியவர்களுக்கு பதிலடி – பாகிஸ்தான் நடிகையின் பதிவு வைரல்..

100 ரசிகர்களுடன் மணாலிக்கு பறந்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் குதூகலித்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

100 ரசிகர்களுடன் மணாலிக்கு பறந்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் குதூகலித்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ இதோ..