போர் தொழில் முதல் டக்கர் வரை.. திரையரங்குகளில் இன்று வெளியான 5 முக்கியமான திரைப்படங்களின் பட்டியல் இதோ..

இந்த வார திரையரங்கில் வெளியான முக்கிய திரைப்படங்களின் பட்டியல் இதோ - list of movies that were released in theatres This week | Galatta

இந்த ஜூன் மாதம் வாரம் வாரம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைய வாய்ப்பு அதிகம். அதன்படி இந்த ஜூன் மாதத்தின் முதல் வாரத்திலே ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் சூப்பர் ஹீரோ கதைகளத்தில் பக்கா கோடை கால திரைப்படமாக வெளியான வீரன் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது, அதே போல் கடந்த வாரம் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கிராம கதைகளத்தில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வெளியான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் முதல் வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த படங்களை தொடர்ந்து இந்த வார திரைப்படங்கள் மீது தனி எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.  அத்தகைய ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான முக்கியமான 5 திரைப்படங்களின் தொகுப்பு இதோ..

டக்கர்

தென்னிந்தியாவில் இளைஞர்களுக்கு பிடித்த ஹீரோவான சித்தார்த் நீண்ட நாளுக்கு பின் தமிழில் நடிக்கவிருக்கும் திரைப்படம் டக்கர். கலகலப்பான காமெடி திரைப்படமான கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்திக் ஜி கிரிஷ் அவர்களின் அடுத்த படைப்பாக டக்கர் இன்று வெளியாகியுள்ளது. பக்கா மாஸ் ஆக்ஷன் காட்சிகளுடன் உருவான டக்கர் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருகின்றது..

here is the complete list of movies that were released in theatres this week

போர் தொழில்

அசோக் செல்வன் சரத் குமார் கிரைம் திரில்லர் கதைகளத்தில் மிரட்டியிருக்கும் போர் தொழில் திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின்  வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

here is the complete list of movies that were released in theatres this week

விமானம்

சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘விமானம்’ இயக்குனர் சிவா பிரசாத் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என்று பைளிங்குவல் திரைப்படமாக உருவாகி இருக்கும் விமானம் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

here is the complete list of movies that were released in theatres this week

பெல்

குருசோமசுந்திரம் நடிப்பில் திரில்லர் திரைப்படமாக வெளியாகியிருக்கு பெல் திரைப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படம் திரையரங்குகளில் தற்போது வெளியாகியுள்ளது.

here is the complete list of movies that were released in theatres this week

டிரான்ஸ்பார்மர் : தி ரைஸ் ஆப் பீஸ்ட்

கடந்த 2007 முதல் இன்று வரை பல பாகங்களாக வெளியாகி உலக மக்களை வியப்பில் ஆழ்திய தி டிரான்ஸ்பார்மர் படத்தின் அடுத்த பாகம் இன்று வெளியாகியுள்ளது

here is the complete list of movies that were released in theatres this week

இந்த திரைப்படங்களை தவிர ஒடிடியில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ‘அவதார் தி வே ஆப் வாட்டர்’, அமேசான் பிரைமில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’, சோனி லிவ்வில் மலையாள பிளாக் பஸ்டர் ‘2018’ ஆகிய திரைப்படங்கள் காண்பதற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

here is the complete list of movies that were released in theatres this week

தளபதி விஜயின் ‘வாரிசு’ வெற்றியையடுத்து முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு.. – வைரலாகும் அப்டேட் இதோ..
சினிமா

தளபதி விஜயின் ‘வாரிசு’ வெற்றியையடுத்து முன்னணி நடிகருடன் கூட்டணி அமைக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு.. – வைரலாகும் அப்டேட் இதோ..

புற்றுநோயால் உயிரிழந்த படிக்காதவன் பட நடிகர்.. இறுதி சடங்கு செய்த இசையமைப்பாளர் டி இமான்..– விவரம் உள்ளே..
சினிமா

புற்றுநோயால் உயிரிழந்த படிக்காதவன் பட நடிகர்.. இறுதி சடங்கு செய்த இசையமைப்பாளர் டி இமான்..– விவரம் உள்ளே..

“ஓடாதுனு சொன்னாலும் அந்த படத்தை எடுப்பேன்” ஜில் ஜங் ஜக் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த சித்தார்த்.. – Exclusive interview உள்ளே..
சினிமா

“ஓடாதுனு சொன்னாலும் அந்த படத்தை எடுப்பேன்” ஜில் ஜங் ஜக் படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்த சித்தார்த்.. – Exclusive interview உள்ளே..