தமிழ் திரையுலகின் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் ஹரிஷ் கல்யாண் கடைசியாக பிரியா பவானி ஷங்கர் உடன் இணைந்து நடித்த ஓ மணப்பெண்ணே திரைப்படம் கடந்த ஆண்டு (2021) நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ரிலீஸாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அடுத்ததாக இயக்குனர் சசி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள நூறுகோடி வானவில் திரைப்படம் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பிரபல நடிகரும், ஜீவி பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்த அடங்காதே படத்தின் இயக்குனருமான சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் டீசல்.

THIRD EYE ENTERTAINMENT மற்றும் SP சினிமாஸ் இணைந்து வழங்கும் டீசல் திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். MS.பிரபு ஒளிப்பதிவில் சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்யும் டீசல் திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.

டீசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளான இன்று(ஜூன்28) டீசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள டீசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இதோ…
 

With all your wishes, love & support here is #Diesel #டீசல் #డీజిల్ #DieselFirstLook 🙏🤗❤️

Produced by @ThirdEye_Films
Co-starring @AthulyaOfficial
🎬 @shan_dir
🎥 @msprabhuDop
🎵 @dhibuofficial @VinayRai1809 @thespcinemas @devarajulu29 @Sanlokesh #Rembon@thinkmusicindia pic.twitter.com/5ZKmtpz8u2

— Harish Kalyan (@iamharishkalyan) June 28, 2022

@SureshChandraa @UrsVamsiShekar #Ananya@thangadurai123 @premkumaractor @ActDheena @tuneyjohn @DuraiKv @decoffl @DoneChannel1 pic.twitter.com/d1UFmSLfuw

— Harish Kalyan (@iamharishkalyan) June 28, 2022