சூப்பர் சிங்கர் விட்டு தூக்கிட்டாங்களா? உண்மையை உடைத்த அனந்த் வைத்யநாதன்.. - சுவாரஸ்யமான தகவல்களுடன் முழு வீடியோ உள்ளே..

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி குறித்து அனந்த் வைத்தியநாதன் வீடியோ உள்ளே - ananth vaithiyanathan about Super singer show | Galatta

தொலைக்காட்சிகளில் காலம் கடந்தும் ரசிகர்களால் கொண்டாடப்படும் நிகழ்ச்சியாக இருந்து வரும் நிகழ்ச்சி விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரபாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. பெரியவர் சிறியவர் என்று இரண்டு வயது பிரிவுகளால் இரண்டு வேறு மாதிரியான நிகழ்சிகளை பல ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்து வருகிறது, உலகளவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சி இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் திரைத்துறையில் பின்னணி பாடகர்கள் நடுவராக இருந்து வருவார்கள் அவர்களுடன் சிறப்பு நடுவராக இசை மற்றும் குரல் வல வல்லுனரான அனந்த் வைத்தியநாதன் அவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் தீர்ப்பில் இவரது மதிப்பு மற்றும் கருத்துக்கு தனி மதிப்பு இருந்து வந்தது, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாடகர்களுக்கு இவர் தனி சிறப்பு பயிற்சியும் கொடுத்து வருவார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒளிப்பரப்படும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அனந்த் வைத்தியநாதன் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து எந்தவொரு தகவலும் வெளிவராமல் இருந்தது.

பின் இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால் ஆர்யா நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ‘அவன் இவன்’ படத்தில் அனந்த் வைத்தியநாதன் நடித்தார். அதை தொடர்ந்து ஆர் ஜே பாலாஜியின் எல்கேஜி படத்திலும் நடித்தார். அதன்பின் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார் அனந்த் வைத்தியநாதன். இடையில் எந்தவொரு திரைப்படங்களிலும் நடிக்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்த அனந்த் வைத்தியநாதன் இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் விஜய் தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏன் கலந்து கொள்வதில்லை.  இதற்கான காரணம் குறித்து கேட்கையில்,

"கண்டிப்பா... நான் அந்த நிகழ்ச்சி விட்டு போக கூடாது... நான் அந்த நிகழ்ச்சியில தொடர்ந்திருக்கனும். 2015 ல என்னோட இசை பள்ளி ஆரம்பிச்சேன். அதுல எனக்கு மிகப்பெரிய ஏமாற்றம். அந்த பள்ளியில் சேர்ந்தா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு போயிடலாம் னு ஒரு பிம்பம் வந்துச்சு..  எனக்கு அது புரிந்தது. வருபவர்கள் இசை கற்றுக்கொள்ள வரனும்னு வரல.. எப்படியாவது நிகழ்சியில சேர்ந்து பிரபலமாகனும் னு வராங்க.. அனந்த் வைத்தியநாதனோட திறமை அவங்களுக்கு புரியலன்றது என்னை ரொம்ப பாதிச்சுது..

கோவிட் வந்தபின் ஒரு மாதிரி ஆயிடுச்சு.. இருந்தாலும் சில மாணவர்கள் கற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் சூப்பர் சிங்கர், விஜய் டிவி என்ன ஒரு பிரபலம் ஆகனும் னு நினைக்குற பிம்பம் கவலை அளிக்கிறது. இன்னிக்கு சூப்பர் சிங்கர் வந்தவங்க பெரும்பாலும் திறமையானவர்கள்.. ஆதாயம் தேடி வந்தா எப்படி இசை வரும்." என்றார் அனந்த் வைத்யநாதன்.

மேலும் பிரபல இசை வல்லுநர் அனந்த் வைத்தியநாதன் அவர்கள் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் முழு வீடியோ இதோ..

தி கேரளா ஸ்டோரி இயக்குனருடன் இணைந்த ஏ.ஆர் ரஹ்மான்..! – எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்.. – விவரம் உள்ளே..
சினிமா

தி கேரளா ஸ்டோரி இயக்குனருடன் இணைந்த ஏ.ஆர் ரஹ்மான்..! – எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்.. – விவரம் உள்ளே..

'தனுஷ் 50' படத்தில் நடிக்க மறுப்பு.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கனா ரனாவத்.. – வைரல் பதிவு உள்ளே..
சினிமா

'தனுஷ் 50' படத்தில் நடிக்க மறுப்பு.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கங்கனா ரனாவத்.. – வைரல் பதிவு உள்ளே..

கோலாகல கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த விழா.. குவியும் வாழ்த்துகள் – வைரலாகும் அழகிய புகைப்படங்கள் உள்ளே..
சினிமா

கோலாகல கொண்டாட்டங்களுடன் நடைபெற்ற வருண் தேஜ் – லாவண்யா திரிபாதி நிச்சயதார்த்த விழா.. குவியும் வாழ்த்துகள் – வைரலாகும் அழகிய புகைப்படங்கள் உள்ளே..