வம்சத்தில் முதல் பெண் குழந்தை.. உற்சாகத்தில் பிரபு தேவா – குவியும் வாழ்த்துகள்.. விவரம் இதோ..

பிரபு தேவாவிற்கு மகள் பிறந்துள்ளார் குவியும் வாழ்த்துகள் விவரம் உள்ளே - Prabhu deva blessed with baby girl | Galatta

திரைத்துறையில் நடன கலைஞராக அறிமுகமாகி பின் நடன இயக்குனராக பணியாற்றி பல படங்களில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பணியாற்றி ரசிகர்களை கவர்ந்த பிரபு தேவா இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘காதலன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவின் கதாநாயகனாக அறிமுகமானார். பின் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்த இவர் இயக்குனராகவும் களமிறங்கி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் தளபதி விஜய் கூட்டணியில் போக்கிரி படம் மூலம்  கொடுத்து இயக்குனராகவும் கவனம் பெற்றார். அதன்பின் இந்தியிலும் பிரபு தேவா இயக்குனராக பிரபலமானார். இடையே திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திய பிரபு தேவா தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு தமிழில் ‘தேள்’, ‘மை டியர் பூதம்’, ‘பொய்கால் குதிரை’ ஆகிய படங்களில் நடித்தார். இந்த ஆண்டு வில்லத்தனமான நடிப்பில் பகீரா திரைப்படம் வெளியானது. மேலும் தொடர்ந்து தற்போது ப்ளாஷ் பேக் மற்றும் சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் 50 வயதை கடந்த பிரபு தேவா அவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 1995 ல் காதல் திருமணம் செய்து கொண்ட பிரபு தேவா கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து இடையே சில காலம் திரைத்துறையில் கவனம் செலுத்தி வந்த பிரபு தேவா கடந்த 2020 ல் பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடங்களாக மனைவியுடன் பொதுவெளியில் வருவதை தவித்த பஈரபு தேவா கடந்த ஏப்ரல் மாதம் பிறந்தநாளை முன்னிட்டு தன் மனைவி ஹிமானி சிங்குடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வந்தார்.

jmk film corporation producer urged a ban on the pasupathy thandatti film

இந்நிலையில் பிரபு தேவா ஹிமானி சிங் இருவருக்கும் தற்போது அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபு தேவா குடும்பத்தில் அண்ணன் தம்பி என யாருக்கும் பெண் குழந்தை இல்லாத நிலையில் பிரபு தேவா குடும்பத்தில் முதல் பெண் குழந்தை தற்போது பிறந்துள்ளது. இந்த நற்செய்தி குடும்பத்தை உச்சகட்ட உற்சாகத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது. இந்த செய்தியடுத்து பிரபு தேவா அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

சூப்பர் சிங்கர் விட்டு தூக்கிட்டாங்களா? உண்மையை உடைத்த அனந்த் வைத்யநாதன்.. - சுவாரஸ்யமான தகவல்களுடன் முழு வீடியோ உள்ளே..
சினிமா

சூப்பர் சிங்கர் விட்டு தூக்கிட்டாங்களா? உண்மையை உடைத்த அனந்த் வைத்யநாதன்.. - சுவாரஸ்யமான தகவல்களுடன் முழு வீடியோ உள்ளே..

கிரிக்கெட் மைதான தொடக்க விழாவிற்கு பிரபல நடிகரை சிறப்பு விருந்தினராக அழைத்த நடராஜன்.. – விவரம் உள்ளே..
சினிமா

கிரிக்கெட் மைதான தொடக்க விழாவிற்கு பிரபல நடிகரை சிறப்பு விருந்தினராக அழைத்த நடராஜன்.. – விவரம் உள்ளே..

கர்பத்திற்கு பிறகு முதல் முறையாக தன் காதலரை அறிமுகப்படுத்திய இலியானா.. – வைரலாகும் பதிவு உள்ளே..
சினிமா

கர்பத்திற்கு பிறகு முதல் முறையாக தன் காதலரை அறிமுகப்படுத்திய இலியானா.. – வைரலாகும் பதிவு உள்ளே..