இசையமைப்பாளராக அறிமுகமாகி தமிழ் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவராக உருவெடுத்து நிற்பவர் ஜீ.வி.பிரகாஷ் குமார்.காதிலக்க யாருமில்லை,ஜெயில்,பேச்சுலர்,ட்ராப் சிட்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.

சூரரை போற்று,D 43,வாடிவாசல் உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.இவர் தனது நெருங்கிய நண்பரான சைந்தவியை 2013-ல் காதலித்து கரம்பிடித்தார்.இவ்ரகள் காதல் கதை குறித்து கோலிவுட்டில் அனைவரும் அறிவர்.ஜீ.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துது.அதற்கு அன்வி என்று பெயரிட்டனர்.இந்த குழந்தையின் புகைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இவர் இசையமைத்த சூரரை போற்று திரைப்படத்தின் சில பாடல்கள் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்திருந்தன.இந்த படம் நேரடியாக அமேசான் ப்ரைம்மில் அக்டோபர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.இவர் நடிப்பில் வசந்தபாலன் இயக்கத்தில் உருவான ஜெயில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஜீ.வி.பிரகாஷ் , படங்கள் குறித்தும் சமூகப்பிரச்னைகள் குறித்தும் ரசிகர்களிடம் பகிர்ந்து வருவார்.தற்போது ஜீ.வி.பிரகாஷ் இரண்டு மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கவர்ந்து புதிய சாதனை படைத்துள்ளார்.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.