ட்விட்டரில் விஜய் செய்த புதிய சாதனை ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | September 11, 2020 21:28 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய்.இவரது நடிப்பில் அட்லீ இயக்கத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான பிகில் திரைப்படம் வசூல் சாதனை புரிந்து அந்த ஆண்டின் பெரிய லாபம் ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றது.இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகள் சகஜ நிலைக்கு திருப்பியதும் மாஸ்டர் படத்தினை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.கொரோனா தடுப்பு பணிகளில் விஜய் ரசிகர்கள் தொடக்கத்தில் இருந்து தங்கள் பங்கை சிறப்பாக செய்து வருகின்றனர்.இவரது பிறந்தநாளுக்கும் விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நண்பர்களுடன் வீடியோகால்,மகேஷ் பாபுவின் சவாலை ஏற்றது என்று ஒரு சில முறை தளபதியின் புகைப்படங்கள் வெளியாகி தாறுமாறாக ட்ரெண்ட் அடித்தன.பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ள இவரை பற்றி என்ன தகவல் வந்தாலும் சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி விடும்.தற்போது விஜயின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது விஜயின் மாஸ்டர் பட செகண்ட் லுக் போஸ்டர் 100 K லைக்குகளை தாண்டி சாதனை படைத்துள்ளது.மேலும் இந்த சாதனையை தொடும் விஜயின் எட்டாவது ட்வீட் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.இந்த சாதனையை செய்யும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தளபதி விஜய்.
MGR's nephew M. G. C. Chandran passes away due to coronavirus
11/09/2020 05:51 PM
Well-known Tamil cinema VFX artist Balamurgan passes away
11/09/2020 02:51 PM