புதுக்கோட்டை அருகே 45 வயதான 2 பிள்ளைகளின் தந்தை 22 வயது கல்லூரி மாணவியுடன் ஓட்டம் பிடித்ததால், அவமானத்தில் மகன்களைக் கொன்ற தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, “பொது மக்கள் அனைவரும் விலகி விருக்க வேண்டும் என்றும், மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” என்றும், தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழகத்தில் நடைபெறும் சம்பவத்தைப் பார்த்தால், பெரும்பாலான மக்கள் விலகி விருக்கவும் இல்லை, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த வல்லம்பக்காடு பகுதியைச் சேர்ந்த 45 வயதான முத்துவுக்கு ஏற்கனவே திருமணமாகி 34 வயதில் ராதா என்ற மனைவியும், அபிஷேக், அபிரித் என்ற இரண்டு மகன்களும் இருந்தனர். இதில், மூத்த மகன் அபிஷேக், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 8 ஆம் வகுப்பும், இளைய மகன் அபிரித் 4 ஆம் வகுப்பும் படித்து வந்தனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், முத்து - ராதா தம்பதியினரின் திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது. ஆனால், தற்போது இவர்களது வாழ்க்கை, இருந்த இடம் கூட தெரியாமல் போய் விட்டது. 

அங்குள்ள ராஜேந்திரபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவிக்கும், 45 வயதான 2 பிள்ளைகளின் தந்தையான முத்துவுக்கும் இடையே முதலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னாளில் அதுவே நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. 

இதனால், அந்த கல்லூரி மாணவியும், முத்துவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்படி, 22 வயதான 

கல்லூரி மாணவி உடன், 45 வயதான முத்து உல்லாச வாழ்க்கை வாழத் தொடங்கியதால், ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார். இதன் காரணமாக, கணவனின் கள்ளக் காதல் விசயம், அவரது மனைவி ராதாவிற்கு எப்படியோ தெரிந்து விட்டது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மனைவி ராதா, பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர் ஒரு கட்டத்தில் இது குறித்து தன் கணவரிடம் கேட்டு உள்ளார். இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. 

அப்போது, கணவனை அழைத்துப் பேசிய மனைவி ராதா, “உங்களுக்கு 45 வயசு ஆகிறது. ஆனால், அந்த பொண்ணுக்கு 22 வயசு தான் ஆகிறது. அது, ரொம்ப சின்ன பொண்ணு, நமக்கு 2 குழந்தைகள் வேற இருக்கிறது. இந்த வயதில் இதுபோல நீங்களே தவறான பாதைக்கு போகலாமா? இந்த விசயம் வெளியே தெரிந்தால், யாருக்கு அசிங்கம்? ஏன் இப்படி பண்றிங்க? என்று குழந்தைக்கு சொல்வது போல், மனைவி ராதா கணவன் முத்துவிடம் கூறி உள்ளார்.

ஆனால், இதை பற்றியெல்லாம் கவலைப்படாத முத்து, தன் கள்ளக் காதலியும், கல்லூரி மாணவியுமான அந்த 22 வயது இளம் பெண்ணுடன், வீட்டை விட்டு ஓட்டம் பிடித்து உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் மனைவி ராதா, அப்படியே அங்கேயே மயங்கிவிட்டார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் முகத்தில் தண்ணீர் அடித்து அவரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்.

அதன் பிறகு, தன் வாழ்க்கையும், தன் பிள்ளைகளின் எதிர்காலமும் இருண்டுவிட்டதை நினைத்துக் கதறி அழுது உள்ளார். மேலும், “பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நன்கு உணரும் பருவத்தில் தன் 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், கணவன் இப்படி செய்து விட்டாரே” என்று புலம்பி தவித்த அவர் அவமானத்தால் தலை குனியவும் நேர்ந்தது. 

மேலும், முத்துவுடன் ஓடிப்போன இளம் பெண்ணின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதன் காரணமாகவும், ராதா கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

இதனையடுத்து, “இனி, இந்த உலகத்தில் வாழக் கூடாது” என்று முடிவு எடுத்த அவர், ஆசையாகவும், பாசமாகவும் வளர்த்த தன் இரு ஆண் குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

அதன்படி, இரவு உணவில் தூக்க மாத்திரைகளைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து உள்ளார். அதை சாப்பிட்ட இரு குழந்தைகளும் நன்றாக உறங்கிய பிறகு, குழந்தைகள் மீது மண்ணெண்ணெய் ஏற்றி, பிறகுத் தன் மீதும் ஊற்றிக்கொண்டு, தீயை பற்ற வைத்து உள்ளார். இதில், 3 பேர் மீது தீ பற்றி எரிந்த நிலையில், சத்தம் போட்டு அலறித் துடித்து உள்ளனர். இதில், ராதாவும், இளைய மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, மூத்த மகன் மட்டும் உயிருக்குப் போராடிக்கொண்டு இருந்துள்ளார்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அந்த சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, அந்த சிறுவனும் உயிரிழந்தான்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கல்லூரி மாணவியுடன் ஓடிப்போன முத்துவை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே, அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.