சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் நீண்ட பயணம் குறித்து ரசிகை கேட்ட கேள்வி... கௌதம் வாசுதேவ் மேனனின் சுவாரஸ்ய பதில் இதோ!

துருவ நட்சத்திரம் படம் பற்றிய ரசிகையின் கேள்விக்கு கௌதம் மேனன் பதில்,gautham menon reply to fan question about dhruva natchathiram | Galatta

இன்னும் ஒரு மாதத்தில் வெளிவர இருக்கும் சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம் - சாப்டர் ஒன் யுத்த காண்டம் திரைப்படம் குறித்து ரசிகை கேட்ட கேள்விக்கு படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் சுவாரஸ்யமாக பதில் அளித்திருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் மிகவும் அழகான ரொமான்டிக் படங்களையும் அதேசமயம் ஸ்டைலான ஆக்சன் படங்களையும் கொடுத்து ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது திரைப்படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த வகையில் கடைசியாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிலம்பரசன்.TR முற்றிலும் வேறு ஒரு ஆளாக மாறி "முத்து" என்ற கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்த கேங்ஸ்டர்  படமான இந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூல் செய்தது.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்த ரிலீஸ் க்கு தயாராகி இருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம் சாப்டர் ஒன் யுத்த காண்டம். முதல் முறையாக சீயான் விக்ரம் உடன் கைகோர்த்திருக்கும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பக்கா ஆக்சன் படமாக தயாராகி இருக்கும் இந்த துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி-DD , விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா, சதீஷ் கிருஷ்ணன், முன்னா சைமன், மாயா கிருஷ்ணன், அபிராமி வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளில் வெவ்வேறு கட்டங்களாக பலமுறை படப்பிடிப்புகள் நடைபெற்று கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் நீண்ட காலமாக ரிலீஸுக்கு காத்திருந்த நிலையில் வருகிற நவம்பர் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் X பக்கத்தில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இடம் ரசிகை ஒருவர், "துருவ நட்சத்திரம் படம் அறிவிக்கப்பட்ட போது நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன் இப்போது ஒரு MNC நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து மூன்று ஆண்டுகள் அனுபவம் ஆகிவிட்டது. இது மாதிரி உங்களுடைய வாழ்க்கை எப்படி மாறி இருக்கிறது" என கேட்டார். இந்த நிலையில் அதற்கு பதில் அளித்த இயக்குனர் கௌதம் வாசுதேவன் அவர்கள், “நிறைய கற்றுக் கொண்டேன் இதற்கிடையில் 3 படங்களை இயக்கி ரிலீஸ் செய்து விட்டேன் 4 ஆந்தாலஜி படங்கள் மற்றும் 5 மியூசிக் வீடியோக்கள் இயக்கிவிட்டேன். மேலும் கூரிய 6ம் அறிவும் வளர்ந்தது” என சுவாரஸ்யமாக பதில் அளித்திருக்கிறார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் அந்தப் பதிவு இதோ...
 

There’s been a lot of learning since then, I’ve directed and released 3 films, 4 anthology shorts, 5 music videos and developed a keen 6th sense. https://t.co/TlKbEVMUHB

— Gauthamvasudevmenon (@menongautham) October 25, 2023