"LCU மாதிரி இது VCUவா?"- எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் விஜய் - வெங்கட் பிரபுவின் தளபதி 68 பட அதிரடி ஷூட்டிங் அப்டேட் இதோ!

விஜய் - வெங்கட் பிரபுவின் தளபதி 68 பட அதிரடி ஷூட்டிங் அப்டேட்,vijay in thalapathy 68 shooting update shared by venkat prabhu | Galatta

முதல் முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடித்துவரும் தளபதி 68 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியானது. மக்களின் மனம் கவர்ந்த நாயகரான தளபதி விஜய் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த லியோ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக தனது அடுத்த பிளாக்பஸ்டர் திரைப்படமாக தன் திரைப்படத்தில் 68வது படமாய் தயாராகி வரும் தளபதி 68 திரைப்படத்தை சமீபத்தில் தளபதி விஜய் தொடங்கினார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக தனக்கென தனி பாணியில் பக்கா எண்டர்டெயின்மென்ட் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தை இயக்குகிறார். 

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த தளபதி 68 திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் முன்னதாக கடந்த செப்டம்பர் மாதமே தொடங்கப்பட்டது. தொடர்ந்து தளபதி 68 படப் பூஜை கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் உடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, ஜெயராம், மோகன், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் உடன் பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுணி தளபதி 68 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். ராஜீவன் அவர்களின் கலை இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த யுவன் சங்கர் ராஜா தளபதி 68 திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

முன்னதாக இன்று அக்டோபர் 24ஆம் தேதி பட பூஜை வீடியோவை வெளியிடுவதற்கு முன்பாக தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களும் ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. அதில் முதலாவதாக, “காலை வணக்கம் இயக்குனர் வெங்கட் பிரபு இது V(p)CUவா?” என இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு நகைச்சுவையாக காமெடி நடிகர் செந்தில் அவர்களின் GIF இமேஜ் ஒன்றை இயக்குனர் பகிர்ந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பு நிறுவனம், "இயக்குனர் வெங்கட் பிரபு சார் இன்று “விஜய்”தசமி.. அந்த ஸ்கிரிப்ட் கொஞ்சம் அனுப்பிச்சா.. பூஜை போடலாம்.." எனக் கேட்க, அதற்கு பதிலளித்த, இயக்குனர் வெங்கட் பிரபு அவர்கள், "இது ஒரு நல்ல கேள்வி!! சரியான கேள்வி!! உண்மையில் என்ன பிரச்சனை என்றால்? கரெக்ஷன் சொல்ல மாட்டோம் என்று சத்தியம் பண்ணுங்க.. ஆபீஸ்ல எங்க இருக்குன்னு சொல்றேன். ஸ்கிரிப்ட் எப்பவோ ரெடி!! முதற்கட்ட படப்பிடிப்பே 15 நாட்கள் முடிந்து விட்டதே. என்ன அட்மின்?  விஜயதசமி வாழ்த்துக்கள்” என பதிலளித்து இருக்கிறார். இயக்குனர் வெங்கட் பிரபு அவர்களின் பதிலால் தளபதி விஜயின் தளபதி 68 திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 15 நாட்கள் நிறைவடைந்து இருப்பதாக தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Idhu Oru nalla kelvi!! Seriyana kelvi! Hmmm.. Actually… enna prechanai na…. Correction solla maattom'nu sathiyam pannunga.. office la enga irukku nu solraen.. script eppovo ready!! First schedule ey 15 days aachey 😁 enna admin 🤣 happy VIJAYadhasami https://t.co/heSoj2ROwz

— venkat prabhu (@vp_offl) October 24, 2023

https://t.co/MbwcuPGCrk pic.twitter.com/AfsdNk5rIv

— venkat prabhu (@vp_offl) October 24, 2023