வைரலாகும் அஜித் பட நடிகை அனிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் – விவரம் இதோ..

வைரலாகும் அணிகாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - Anikha surendran postar viral on social media | Galatta

தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். முதல் படத்திலே ரசிகர்களின்  கவனத்தை ஈர்த்த அனிகா பின் தொடர்ந்து தமிழில் நானும் ரௌடி தான், மிருதன் விஸ்வாசம், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தை நட்சத்திரமாக இருந்த அனிகா தற்போது நன்கு வளர்ந்து கதாநாயகியாக நடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். அதன்படி அவ்வப்போது அனிகா வின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும். அதன்படி நடிகை அனிகா கதாநாயகியாக சமீபத்தில் ‘புட்ட பொம்மா’  திரைப்படதின் மூலம் தெலுங்கில் கதாநாயாகியாக அறிமுகமானார். மலையாளத்தில் ஹிட் அடித்த கப்பெல்லா திரைப்படத்தின் ரீமேக்கான புட்ட பொம்மா அனிகாவிற்கு நல்ல அறிமுக திரைப்படமாக அமைந்தது.

அதை தொடர்ந்து தெலுங்கில் ஒ மை டார்லிங் என்ற படத்தில் நடித்த இவர் லிப் லாக் காட்சியிலும்  துணிச்சலாக நடித்தார். அந்த காட்சிகள் இணையத்தில் அதிகம் சர்ச்சைகுரிய விஷயமாக அப்போது பகிரப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது அனிகா மலையாளம் மற்றும் தமிழில் படங்களில் நடித்து வருகிறார்.

epic movie maniratnam ponniyin selvan 2 making video released

இந்நிலையில் இணையத்தில் அனிகா சுரேந்திரன் புகைப்படம் கொண்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் இணையத்தில் வைரலானது. இதை கண்ட ரசிகர்கள் அதிர்ந்தனர். அந்த போஸ்டரில் அனிகா மறைந்த தேதி ஜூலை என்று இருந்ததால் அது போலியானது என்று உறுதி செய்தனர். நந்தினி என்ற கதாபாத்திரத்தில் அனிகா தமிழில் நடித்து வரும் புது படத்தின் போஸ்டர் என்பதை உறுதி செய்து ரசிகர்கள் ஆசவாசப் படுத்தி கொண்டனர். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்து லீக் ஆன இந்த புகைப்படம் எந்த படம் என்று என்பது தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உதவி இயக்குனர் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. கண்டனம் தெரிவித்த பா ரஞ்சித்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு.. பின்னணி இதோ..
சினிமா

உதவி இயக்குனர் மீது 5 பிரிவுகளில் வழக்கு.. கண்டனம் தெரிவித்த பா ரஞ்சித்.. – இணையத்தில் வைரலாகும் பதிவு.. பின்னணி இதோ..

“இதனால் தான் அந்த ட்வீட் போட்டேன்” உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“இதனால் தான் அந்த ட்வீட் போட்டேன்” உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

ரசிகர்களுக்கு வேற லெவல் Birthday treat கொடுத்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ரசிகர்களுக்கு வேற லெவல் Birthday treat கொடுத்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..