“இதனால் தான் அந்த ட்வீட் போட்டேன்” உண்மையை உடைத்த விஜய் ஆண்டனி – சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

விஜய் ஆண்டனியின் ட்வீட் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட உண்மைகள் முழு வீடியோ இதோ – vijay antony about his controversy tweet | Galatta

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அவர்கள் திரைத்துறையில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து மக்கள் பிரச்சனைகளை பேசி பல படங்களை ஹிட் கொடுத்துள்ளார். இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் சாதித்த விஜய் ஆண்டனி தற்போது கதாநாயகனாகவும் கவனம் பெற்று வருகிறார். அதன்படி தற்போது விஜய் ஆண்டனி வள்ளிமயில், அக்னி சிறகுகள், கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனராக அவதாரம் எடுத்து பிச்சைக்காரன் 2 படத்தை எடுத்து முடித்துள்ளார். சமூக பிரச்சனையை கதைக்களமாக கொண்ட பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில் விஜய் ஆண்டனி நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு அவரது திரைப்பயணம் குறித்தும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதில் அவ்வப்போது இணையத்தில் சமூக பிரச்சனைகள் சார்ந்து கருத்து தெரிவிப்பது குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக வட மாநிலத்தவர் பிரிவினை பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது விஜய் ஆண்டனி பதிவிட்ட பதிவு அன்று அதிகம் பேசப்பட்டது. இது குறித்து அவரிடம் கேட்கையில்,

"யாரோ ஒருத்தவங்கள அடிக்குற விஷயத்தை பார்த்தேன்.‌ சில விஷயங்கள் பிரிவினை சார்ந்தவைகள் சமீப காலமாக நடக்குறத பார்த்தேன். பாவம் அவங்க..அவங்களும் நம்மள மாதிரி தான்.. நம்ம ர் மக்கள் நிறைய பேர் மலேசியா, மும்பை னு ஒவ்வொரு ஊரிலும் நம்ம மக்கள் வாழ்றாங்க.. எல்லோரும் இப்படி பார்க்க ஆரம்பிச்சிடுச்சிட்டா அவங்களையும் விரட்டியடிப்பாக்க.. அப்படி பார்க்க வேண்டாம்.. இந்தியன் னு சொல்ல வேண்டாம்.. தமிழன் சொல்ல வேண்டாம்.. எல்லோரும் மனுஷன்.. நல்லவன் , கெட்டவன், ஏழை, பணக்காரன்  இது தான் இருக்கு உலகத்துல.. இதுலே இன்னும் சாதி மதம் இனம் னு மக்களை பிரிக்க வேண்டாம்..  நம்மள அறியாமலே பாகிஸ்தான் மக்களை எதிரியா பார்க்க ஆரம்பிசிட்டோம்..  அங்க ஒருநாள் இருந்தா அவங்களும் நம்ம மீது அன்பா இருப்பாங்க.. அரசியல் ரீதியா அதை பிரிச்சிட்டாங்க. ஒருவேளை ஏலியன் எதனா நம்ம உலகத்துக்கு வந்துச்சுனா நம்மளாம் ஒண்ணு சேர்ந்துடுவோம்.. அந்த பிரிவினை வேண்டாம் னு நினைச்சோம். அவன நம்ம வடக்கன் னு கூட்டுறோம்.. பதிலுக்கு அவன் நம்மள தெற்கன்னு கூப்டா என்ன ஆகும்..  அந்த வார்த்தையே கேளிக்கை வார்த்தையா மாறிடுச்சு.. அதனால அதை ோட்டேன்..” என்றார் விஜய் ஆண்டனி..  

மேலும் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி அவர்கள் நமது கலாட்டா தமிம்ழ் சிறப்பு பேட்டியில் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..

‘என் ரோஜா நீயே..’ விஜய் தேவரகொண்டா பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்ட அட்டகாசமான First single.. – ரசிகர்களால் வைரலாகும் பாடல் இதோ..
சினிமா

‘என் ரோஜா நீயே..’ விஜய் தேவரகொண்டா பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்ட அட்டகாசமான First single.. – ரசிகர்களால் வைரலாகும் பாடல் இதோ..

“விஜய்-க்கு பாரதிராஜா, GVM வாய்ப்பு கொடுக்கல..” மேடையில் உண்மையை உடைத்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“விஜய்-க்கு பாரதிராஜா, GVM வாய்ப்பு கொடுக்கல..” மேடையில் உண்மையை உடைத்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் – வைரலாகும் வீடியோ இதோ..

“நான் மலேசியாவில் இருக்கேன்.. இங்க அவங்க உடைஞ்சு போயிட்டாங்க..” விபத்தின் போது மனைவியின் மனநிலை குறித்து விஜய் ஆண்டனி.. – முழு வீடியோ இதோ..
சினிமா

“நான் மலேசியாவில் இருக்கேன்.. இங்க அவங்க உடைஞ்சு போயிட்டாங்க..” விபத்தின் போது மனைவியின் மனநிலை குறித்து விஜய் ஆண்டனி.. – முழு வீடியோ இதோ..