“இதுக்கு இயக்குனரை பழி சொல்ல முடியாது..“ தளபதி விஜயின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்தது குறித்து நடிகர் சாந்தனு பகிர்ந்த தகவல் – முழு வீடியோ இதோ..

மாஸ்டர் பட விமர்சனத்திற்கு பதிலளித்த சாந்தனு பாக்யாராஜ் வீடியோ உள்ளே -  Shanthnu about Lokesh kanagaraj Master movie | Galatta

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வந்த பாக்யராஜ் அவர்களின் மகனான சாந்தனு சக்கரக்கட்டி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். பின் தொடர்ந்து பல படங்கள் நடித்தாலும் எந்தவொரு திரைப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பின் நீண்ட நாள் கழித்து அட்டகாசமான அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கி இன்று அடுத்தடுத்த திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்று வளர்ந்து வரும் இளம் நடிகரானார். தற்போது இவர் நடிப்பில் விக்ரம் சுகுமாரன் இயக்கிய ‘இராவண கோட்டம்’ திரைப்படம்  வரும் மே 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று படத்தின் எதிர்பார்ப்பை உயர்த்தியது. இந்நிலையில் நடிகர் சாந்தனு பாக்யராஜ் அவர்கள் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு திரைப்படம் குறித்தும் அவரது திரைப்பயணம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2021 ல் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து கிடைத்த விமர்சனம் குறித்து பேசிய அவர்,  

“நீங்க ட்ரோல் பன்றது உரிமை அப்படி னு ஆயிடுச்சு.. அவங்களுக்கு பதில் கொடுக்கனும் னா நம்மளோட வேலைய பார்க்க முடியாது.. நம்மளோட உழைப்பு உண்மையா இருக்குனு நம்புறவங்க உறுதுணையாக இருப்பாங்க.. அந்த விஷயம் மட்டும் ஆதரவா எடுத்துக்கிட்டு நல்லபடியே அடுத்தடுத்து போயிட்டே இருக்கனும்..

நான் விஜய் அண்ணா படத்தில் நடிக்கிறேன் அப்படிங்கறப்போ ஒரு எதிர்ப்பார்ப்பு வந்திருக்கு.. அது இல்லங்கறப்போ தான் அது ட்ரோலா மாறிடுச்சு..  இந்த படமாவது நமக்கு திருப்பு முனையா அமையுமா ன்ற நம்பிக்கையில் தான் நான் மாஸ்டர் பண்ணேன்.. ஆனால்  நான் நடிச்ச காட்சிகள் படத்தில் வரல..  இயக்குனர் எழுதுனது படத்தில் சேராமல் போய்விட்டது.. அதுக்கு நான் இயக்குனர பழி சொல்ல முடியாது.. ரசிகர்கள் எதிர்பார்த்ததால தான் அது ட்ரோலா மாறிடுச்சு..” என்றார் நடிகர் சாந்தனு.

மேலும் நடிகர் சாந்தனு அவர்கள் இராவண கோட்டம் படக்குழுவினருடன் கலந்து கொண்டு படம் குறித்து பேசிய முழு வீடியோ இதோ..

ரசிகர்களுக்கு வேற லெவல் Birthday treat கொடுத்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

ரசிகர்களுக்கு வேற லெவல் Birthday treat கொடுத்த விஜய் தேவரகொண்டா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.. – வைரலாகும் பதிவு இதோ..

“ஃபர்ஹானா படத்தில் ஏன் மெட்ரோ?” அட்டகாசமான வீடியோவுடன் இயக்குனர் கொடுத்த விளக்கம்.. – வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“ஃபர்ஹானா படத்தில் ஏன் மெட்ரோ?” அட்டகாசமான வீடியோவுடன் இயக்குனர் கொடுத்த விளக்கம்.. – வைரலாகும் வீடியோ இதோ..

‘என் ரோஜா நீயே..’ விஜய் தேவரகொண்டா பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்ட அட்டகாசமான First single.. – ரசிகர்களால் வைரலாகும் பாடல் இதோ..
சினிமா

‘என் ரோஜா நீயே..’ விஜய் தேவரகொண்டா பிறந்தநாளையொட்டி படக்குழு வெளியிட்ட அட்டகாசமான First single.. – ரசிகர்களால் வைரலாகும் பாடல் இதோ..