இந்திய சினிமாவின் நட்சத்திர நாயகிகளில் ஒருவராகவும் பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோயினாகவும் திகழும் நடிகை கீர்த்தி சுரேஷ், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீசான சாணிக் காயிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் இணைந்து வாஷி திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தயாராகிவரும் போலா ஷங்கர் படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் சர்க்காரு வாரி பாட்டா திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் இன்று மே 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

பொதுவாக தெலுங்கு ரசிகர்கள் அவர்களது அபிமான கதாநாயகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் திரையரங்குகளில் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது ஆந்திராவில் சுதர்சன் திரையரங்கில் சர்க்காரு வாரி பாட்டா ரிலீசை முன்னிட்டு மகேஷ்பாபுவுக்கு பிரம்மாண்ட கட்அவுட் வைக்கப்பட்டுள்ள நிலையில் அருகில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் 35 அடியில் பெரிய கட்அவுட் வைத்துள்ளனர். 

வழக்கமாக கதாநாயகர்களுக்கு மட்டுமே பிரம்மாண்ட கட்அவுட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ்க்கு வைக்கப்பட்டுள்ள 35 அடி கட்அவுட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…