தமிழ் திரையுலகில் குறிப்பிடப்படும் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சாந்தனு பாக்யராஜ் சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து சித்து +2, கண்டேன், அம்மாவின் கைப்பேசி, வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமாணம், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் நெட்பிளிக்ஸில் வெளியான பாவக் கதைகள் ஆந்தாலஜி வெப் சீரிஸில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் எபிசோடில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த சாந்தனு, தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு (2021) இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வெளிவந்த கசடதபற மற்றும் அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் வெளிவந்த முருங்கைகாய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த சாந்தனு அடுத்ததாக மத யானைக் கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தயாராகி வரும் இராவண கோட்டம் படத்தில் நடித்துள்ளார்.

இராவண கூட்டம் திரைப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகர் சாந்தனுவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மீண்டும் அறிவிப்பு வரும் வரை யாரும் அந்த பக்கத்திற்கு எந்த பதிலும் அளிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.