தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெய். முன்னதாக இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய்  நடித்த குற்றம் குற்றமே திரைப்படம் கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் ரிலீஸாகி  ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது

தொடரந்து ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, என வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வரும் நிலையில் தற்போது கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுர்தர்.C இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள திரைப்படம் பட்டாம்பூச்சி. இயக்குனர் சுந்தர்.C மற்றும் ஜெய் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பட்டாம்பூச்சி படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

AVNI டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் பட்டாம்பூச்சி திரைப்படத்தை தயாரித்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படம் இந்த மே மாதம் ப ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், நவநீத்.S இசையமைத்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்திற்கு ஃபின்னி ஆலிவர்.S படத்தொகுப்பு செய்துள்ளார். இந்நிலையில், தற்போது பட்டாம்பூச்சி திரைப்படத்தின் ப்ரோமோ பாடல் வெளியானது. அசத்தலான அந்த பரோமோ பாடல் இதோ…