2012-ல் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவான முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.ஹீரோயின் ஆவதற்கு முன் 2010-ல் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார்.தமிழின் முதல் சூப்பர்ஹீரோ படமாக முகமூடி உருவானது.முகமூடி படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் பூஜாவிற்கு தமிழில் வாய்ப்புகள் குறைந்தன.

இதனையடுத்து தெலுங்கு,ஹிந்தி மொழிகளில் நடிக்கத்தொடங்கினார் பூஜா.ஹ்ரித்திக் ரோஷனின் மொஹஞ்சதாரோ படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் , பல ரசிகர்களை பெற்றார்.தெலுங்கில் இவர் நடித்த படங்கள் ஹிட் அடிக்க ராசியான நடிகையாக மாறினார்.ஜூனியர் NTR,அல்லு அர்ஜுன்,மகேஷ் பாபு என்று வரிசையாக பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார்.

கடைசியாக இவர் ஹீரோயினாக நடித்த Alavaikunthapuramuloo,Most Eligible Bachelor,ராதே ஷியாம்,பீஸ்ட் படங்கள் வெளியாகி செம ஹிட் அடித்திருந்தன.இதனை அடுத்து SSMB 28,சல்மான் கான் ஹிந்தி படம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் பூஜா தனது புகைப்படங்கள் வீடியோக்கள் பட அப்டேட்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.

இவர் தெலுங்கில் வெங்கடேஷ்,வருண் தேஜ்,தமன்னா,மெஹரீன் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி வரும் படம் Fun and Frustration 3,இந்த படம் மே 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.F3 படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் தோன்றுகிறார் பூஜா ஹெக்டே.

Life AnteItta Vundaala என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.பூஜா ஹெக்டேவின் சில நடன கிளிம்ப்ஸ்,மேக்கிங் உள்ளிட்டவை அடங்கிய இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.