பொது மக்களை அடிக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு இல்லை எனவும், மக்களிடம் எது போன்ற அணுகு முறையில் காவலர்கள் ஈடுபட வேண்டும் என்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருவதாகவும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

சமீப காலங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்கள் காவல் நிலையத்தில் இறப்பது குறித்தும் அவர்கள் இறப்பில் அவ்வப்போது சந்தேகம் ஏற்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. சந்தேகத்தின் பேரில் அழைத்து செல்லும் நபர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் காவல்துறையினரால் துன்புறுத்தப்பட்டு மரணடைகினற்னர்.  தொடரும் லாக் அப்  இறப்பினால் பொதுமக்கள் காவல்துறை மீது அதிருப்தி அடைந்துள்ளது. 

இந்நிலையில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களுக்கு பல்பொருள் அங்காடியின் விரிவாக்கப்பட்ட புதிய சுயசேவை பிரிவை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு மற்றும் பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் திறந்து வைத்தனர். 

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெருநகர சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பேசியதாவது: பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தவறு இருக்கிறது. நேற்று மட்டும் மூன்று சம்பவம் நடைபெற்றுள்ளது. மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்து முதல்வரிடம் அழைத்து சென்று அறிவுரை வழங்கி வருகிறோம். மீண்டும் இது தொடர் நடைபெற்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து கைது செய்யப்படும். பேருந்துகளில் பிரச்சனை உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதனைத்தொடர்ந்து நேற்று ஒரு நாளில் மூன்று  வழக்குகள் பதிவு செய்து 10 மாணவர்களை கைது செய்து நடவடிக்கை உயர்கல்வித் துறையில் உடன் பேச்சுவார்த்தை நடத்தி கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க காவல்துறை சார்பில் திட்டம். கல்லூரி மாணவர்களுக்கு இதுவே கடைசி, இதுபோன்ற மீண்டும் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையில் ஈடுபடுவோம். பொது மக்களை அடிக்கும் அதிகாரம் காவல்துறையினருக்கு இல்லை, ஆனால் காவலர்களும் சில இடங்களில் தாக்கப்படுகின்றனர். மக்களிடம் எது போன்ற அணுகு முறையில் காவலர்கள் ஈடுபட வேண்டும் என்பது குறித்து காவலர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறோம். மயிலாப்பூர் கொலை வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை திரட்டி சமர்ப்பித்துள்ளம் துரிதமாக செயல்படுத்தி கொலையாளிகளை தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்தக் கொலை சம்பந்தமாக குற்றவாளிகள் இருவர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விரைந்து தண்டனை வழங்கப்படும் என்று பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.