தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகராக திகழும் நடிகர் ஜெய் நடிப்பில் அடுத்தடுத்து பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, என வரிசையாக திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன. மேலும் தற்போது கலகலப்பு-2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சுர்தர்.C இயக்கத்தில் நடிகர் ஜீவாவுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக மேலும் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்திலும் ஜெய் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.C மற்றும் ஜெய் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் திரைப்படம் பட்டாம்பூச்சி. மேலும்  இத்திரைப்படத்தில் ஹனிரோஸ் வர்கீஸ் மற்றும் இமான் அண்ணாச்சி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இயக்குனர் பத்ரி நாராயணன் இயக்கத்தில் சைக்கோ திரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தை AVNI டெலி மீடியா சார்பில் குஷ்பூ சுந்தர் தயாரித்துள்ளார். இசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், நவநீத்.S இசையமைத்துள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்திற்கு ஃபின்னி ஆலிவர்.S படத்தொகுப்பு செய்துள்ளார். 

விரைவில் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ள பட்டாம்பூச்சி திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது பட்டாம்பூச்சி திரைப்படத்திலிருந்து வேட்டைகள் ஆரம்பம் எனும் புதிய பாடல் வெளியானது. அந்தப் பாடல் இதோ…