மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது இந்திய திரையுலகில் பல மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் பல திரைப்படங்களில் நடித்து பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் நடிகர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வரிசையாக அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முதல்முறையாக வெப்சீரிஸிலும் களமிறங்கிய துல்கர் சல்மான்  ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடித்துள்ள கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து முன்னணி இயக்குனர் பால்கி இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் CHUP-REVENGE OF THE ARTIST திரைப்படத்திலும் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ளார். 

இதனிடையே பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான் திரைப்படம் சீதா ராமம். ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்க, வைஜெயந்தி மூவிஸ் வழங்கும் சீதா ராமம் திரைப்படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ள துல்கருடன் இணைந்து ம்ரூனல் தாகூர், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சுமந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

சீதா ராமம் படத்திற்கு P.S.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரைப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. அந்த வீடியோ இதோ…