மாடலாக தனது மீடியா பயணத்தை தொடங்கி சின்னத்திரையில் ஹீரோயினாக அசத்தி வருபவர் தேஜஸ்வினி கௌடா.கன்னட சீரியலில் ஹீரோயினாக நடித்து கவனம் ஈர்த்த இவர் அடுத்ததாக தெலுங்கில் ஒளிபரப்பான சீரியல் மூலம் தெலுங்கு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார் தேஜஸ்வினி கௌடா.இந்த தொடரில் இவரது நடிப்புக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது,இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் தேஜஸ்வினி கௌடா.

இதனை தொடர்ந்து தெலுங்கில் Care of Anausya என்ற தொடரில் நடித்து அசத்தி வருகிறார் தேஜஸ்வினி கௌடா.தமிழில் ஜீ தமிழில் ஒளிபரப்பை தொடங்கி விறுவிறுப்பாக சென்று வரும் வித்யா நம்பர் 1 என்ற தொடரில் தேஜஸ்வினி ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருவார் தேஜஸ்வினி.

தற்போது இவருக்கும் பிரபல தெலுங்கு டிவி நடிகர் அமர்தீப் சௌத்ரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.விரைவில் தம்பதிகளாக உள்ள இருவருக்கும் ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.