பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகி தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, ஈட்டி, இமைக்கா நொடிகள் என வரிசையாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் அதர்வா.

இதனையடுத்து அதர்வா நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக ட்ரிக்கர், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் மற்றும் நிறங்கள் மூன்று ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் நடிகர் அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் குருதி ஆட்டம் திரைப்படம் நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு நாளை ஆகஸ்ட் 5 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. 

8 தோட்டாக்கள் படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக குருதி ஆட்டம் தயாராகியுள்ளது. பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார், ராதாரவி, வட்சன் சக்கரவர்த்தி மற்றும் வினோத் சாகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில், குருதி ஆட்டம் திரைப்படத்துக்கு  யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்நிலையில் குருதி ஆட்டம் திரைப்படத்திலிருந்து புதிய விறுவிறுப்பான ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.