மாடலிங் மூலம் மீடியாதுறைக்குள் அறிமுகமாகி பிரபலமான சீரியல் நடிகையாக சின்னத்திரையில் அசத்தி வருபவர் ஸ்வேதா ஸ்ரிம்டன்.மாடலிங்கில் பெரிதும் ஆர்வமுடைய இவர் விளம்பரப்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார்.இவற்றில் கிடைத்த வரவேற்பை அடுத்து சில சீரியல்களில் சின்ன சின்ன முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார்

அடுத்ததாக ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் ஸ்வேதா ஸ்ரிம்டன்.இந்த தொடரில் முக்கிய வில்லியாக நடித்து வரும் இவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இதனை தவிர ஜீ தமிழின் மற்றொரு ஹிட் தொடரான நினைத்தாலே இனிக்கும் தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

இவர் நடிக்கும் படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் அடுத்ததாக உருவாகும் படம் ராஜா கிளி.தம்பி ராமையா இந்த படத்தினை இயக்குகிறார்.சமுத்திரக்கனி,தம்பி ராமையா,கும்கி அஷ்வின் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இவரை தவிர பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நாயகியாக ஸ்வேதா ஸ்ரிம்டன் நடிக்கிறார்.சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் முக்கிய படத்தில் நடிப்பதால் பல ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த படத்தின் பூஜை நேற்று நடைபெற்றுளளது இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.இதனை தவிர இனி ஒரு காதல் செய்வோம் என்ற படத்திலும் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார்.
 

Our Next project #RajaKili starring @thondankani #ThambiRamaiah was launched today with a Pooja.
#MsBaskar @suvetashrimpton @Actor_Ashwin @sureshkamatchi@gopinath_dop @editorsudharsan @UmeshJKumar @VHouseProd_Offl @praveen4joe @Vetrikumaran7 @Malik_Ayishaoff @johnmediamanagr pic.twitter.com/e8VRma7lpw

— V House Productions (@VHouseProd_Offl) August 3, 2022

 

View this post on Instagram

A post shared by Suveta 🌟 (@suvetashrimpton)