ஆஸ்கர் விருது வென்ற கலைஞருடன் உலகநாயகன் கமல் ஹாசன்.. – இறுதிகட்டத்தை நெருங்கும் ஷங்கரின் இந்தியன் 2.. - வைரல் பதிவு உள்ளே..

இந்தியன் 2 மேக்கப் கலைஞருடன் உலகநாயகன் கமல் ஹாசன் விவரம் உள்ளே - Kamal haasan about Oscar winning makeup artist Michael westmore | Galatta

பல தசாப்தங்களாக  ரசிகர்களை பல தனித்துவமான கதைகள் மூலம் மகிழ்வித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் உலகநாயகன் கமல் ஹாசன். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று கமல் ஹாசனின் மார்கெட்டை மேலும் உயர்த்தியது. அதையடுத்து தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் இந்தி, தெலுங்கு மொழியில் உருவாகி வரும் ‘புரோஜக்ட் கே’ படத்தில் பிறபாஸுக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். அதை தொடர்ந்து துணிவு இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ‘KH 233’ படத்திலும் மணி ரத்னம் இயக்கத்தில் ‘KH234’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

இதனிடையே இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் நடித்து வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’. தமிழ் திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக இருந்து வரும் இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க இவர்களுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத்சிங்,  மனோபாலா, டெல்லி கணேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர். லைகா தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்திற்கு தேவையான VFX காட்சி வேலையில் இறங்கவுள்ளதாக தகவல். இதனிடையே உலகநாயகன் கமல் ஹாசன் அவர்கள் ஆஸ்கர் விருது வென்ற பிரபல மேக்கப் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் உடன் புகைப்படத்தை பகிர்ந்து அவரை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்       

“மைக் வெஸ்ட்மோரின் வேலையை நான் சொல்ஜர் ப்ளு படத்தில் இருந்து இன்று வரை பார்த்து ரசித்து வருகிறேன். அவர் வேலையினால் நான் முழுவதும் ஈர்க்கப்பட்டேன். மேக்கப்களை மட்டுமல்ல புகழ் பாராட்டுகளை அவருடன் அணிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 40 வருடங்கள் அன்புக்குறியின் வேகத்தை போல் பறந்தன..” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது கமல் ஹாசனின் பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

ஆஸ்கர் விருது வென்ற மைக்கேல் வெஸ்ட்மோர் உலகநாயகன் கமல் ஹாசனுடன் இந்தியன், அவ்வை ஷண்முகி, சாச்சி 420,  ஹே ராம், தசாவதாரம், ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த கூட்டணியில் உருவான அனைத்து படமும் உலகநாயகனின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படங்களாகும். பெரும்பாலும் இந்த படங்களில் ஒப்பனை கலைக்கு மிகப்பெரிய பாராட்டுகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த உலகத்தரம் வாய்ந்த வெற்றி கூட்டணி மீண்டும் ஒரு முறை இந்தியன்  2 திரைப்படத்தில் இணைந்துள்ளனர்

புகழ்பெற்ற அமெரிக்க மேக்கப் கலைஞர் மைக்கேல் உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய மிக முக்கியமான திரைப்படங்களில் பணியாற்றியவர். அதில் கடந்த 1995 ல் வெளியான மாஸ்க் படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்றார் மைக்கேல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

A post shared by Kamal Haasan (@ikamalhaasan)

சினிமா

"இரண்டாம் பாதி குறித்த நம்மளோட பார்வை தவறு..” மாவீரன் பட விமர்சனத்திற்கு பதிலளித்த நடிகர் திலீபன்.. – Exclusive Interview உள்ளே...

உலகின் 5வது பெரிய வைரத்தின் ரகசியத்தை உடைத்த தமன்னா..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..
சினிமா

உலகின் 5வது பெரிய வைரத்தின் ரகசியத்தை உடைத்த தமன்னா..! – அதிர்ச்சியில் ரசிகர்கள்..

“படம் முழுக்க அரசியல் தான்..” சுப்ரமணியபுரம் படம் குறித்து நடிகரும் இயக்குனருமான சசிகுமார் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview இதோ..
சினிமா

“படம் முழுக்க அரசியல் தான்..” சுப்ரமணியபுரம் படம் குறித்து நடிகரும் இயக்குனருமான சசிகுமார் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் – Exclusive interview இதோ..