தனுஷின் '100 கோடி' பிளாக்பஸ்டர் பட இயக்குனரோடு கைகோர்க்கும் துல்கர் சல்மான்... அசத்தலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

தனுஷின் வாத்தி பட இயக்குனரோடு இணையும் துல்கர் சல்மான்,dulquer salmaan next movie with vaathi director venky atluri | Galatta

நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி பின்னர் “வாயை மூடி பேசவும்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பரிச்சயமான துல்கர் சல்மான் அவர்கள் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் “ஓ காதல் கண்மணி” படத்தில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளையடித்தார். இதனை அடுத்து துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ் படங்கள் மட்டுமல்லாது தனது மலையாள திரைப்படங்கள் வாயிலாகவும் தமிழ் மக்களை தொடர்ந்து மகிழ்வித்து வரும் துல்கர் சல்மான் நடிப்பில் கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழில் ஹே சினாமிக்கா, மலையாளத்தில் சல்யூட், தெலுங்கில் சீதாராமம், ஹிந்தியில் சுப் - ரிவெஞ் ஆஃப் தி ஆர்டிஸ்ட் என நான்கு மொழிகளில் நான்கு படங்கள் வெளிவந்து ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெற்றன.

அடுத்ததாக துல்கர் சல்மான் நடிப்பில் பக்கா கேங்ஸ்டர் திரைப்படமாக தயாராகி இருக்கும் கிங் ஆப் கோத்தா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் PAN INDIA படமாக வெளிவரவுள்ளது. காரைக்குடியில் படமாக்கப்பட்ட கிங் ஆப் கோட்டா திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த 2023 ஆம் ஆண்டு ஓணம் பண்டிகை வெளியீடாக ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. முன்னதாக முதல் முறை வெப் சீரிஸிலும் களமிறங்கி இருக்கும் துல்கர் சல்மான் நடிப்பில் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தயாராகி இருக்கிறது. ஃபேமிலி மேன் மற்றும் ஃபர்ஸி உள்ளிட்ட வெப் சீரிஸ் களின் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி இருக்கும் கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்பட்டு விரைவில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ரிலீஸாக இருக்கிறது.

இந்த வரிசையில் அடுத்ததாக கடந்த பிப்ரவரி மாதம் தனுஷ் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாக 100 கோடிக்கு மேல் வசூலித்த வாத்தி திரைப்படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். வாத்தி படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான சித்தாரா என்டர்டைன்மென்ட்ஸ் , ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய திரைப்படத்தை அடுத்த 2024 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடப் படக் குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் தயாராகி பிற மொழிகளில் வெளிவந்த சீதாராமம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது மீண்டும் நேரடி தெலுங்கு படமாக துல்கர் சல்மான் நடிக்கும் இந்த திரைப்படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய திரைப்படத்தை அறிவிக்கும் வகையில்  துல்கர் சல்மான் மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி இணைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பு இதோ…

 

The uber cool #DQ is BACK! 🤩

Sithara Entertainments' in Association with @fortune4cinemas #Production24 will be directed by the our dearest #VenkyAtluri ft. @dulQuer. Shoot begins this October! 🎬

Summer 2024 release ✨ @vamsi84 #SaiSoujanya @SitharaEnts #SrikaraStudios pic.twitter.com/E2KOYHJH8E

— Sithara Entertainments (@SitharaEnts) May 14, 2023

'சூர்யா சார் அடக்கமான மனிதர், அசாதாரணமான கடின உழைப்பாளி!'- கங்குவா பட பிரபலம் புகழாரம்! வைரலாகும் SHOOTING SPOT புகைப்படம் இதோ
சினிமா

'சூர்யா சார் அடக்கமான மனிதர், அசாதாரணமான கடின உழைப்பாளி!'- கங்குவா பட பிரபலம் புகழாரம்! வைரலாகும் SHOOTING SPOT புகைப்படம் இதோ

தொடரும் பொன்னியின் செல்வன் 2 பட வெற்றிப் பயணம்... பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட மாபெரும் வசூல் சாதனை! விவரம் இதோ
சினிமா

தொடரும் பொன்னியின் செல்வன் 2 பட வெற்றிப் பயணம்... பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட மாபெரும் வசூல் சாதனை! விவரம் இதோ

சினிமா

"பார்ட் 1க்கு சம்பந்தமே இல்லாத போது பிச்சைக்காரன் 2 என்ற டைட்டில் ஏன்?- காரணத்தை தெரிவித்த விஜய் ஆண்டனி! வீடியோ உள்ளே