90’s க்கு திரும்ப கொண்டு போன ஹிப் ஹாப் ஆதி.. அட்டகாசமான பாடலை வெளியிட்ட ‘வீரன்’ படக்குழு... – ரசிகர்களால் வைரலாகும் பாடல் இதோ..

ஹிப் ஹாப் ஆதியின் வீரன் படத்தின் இரண்டாவது பாடலை வைரலாக்கும் ரசிகர்கள் விவரம் இதோ - Hip hop aadhi veeran 2nd single out now | Galatta

இளம் தலைமுறையினரை கவர்ந்த திரைப்பிரபலம் ஹிப் ஹாப் ஆதி. சுயாதீன ராப் பாடகராக கவனம் பெற்று பின் திரையுலகில் நடிகராக இசையமைப்பாளராக பாடலாசிரியராக இயக்குனராக என்று பல்துறையில் சிறந்து விளங்கி மிகபெரிய பேசு பொருளாக சம கால தமிழ் திரையுலகில் இருந்து வருகிறார். மேலும் இளம் தலைமுறையினரை கவரும் விதத்தில் ஒவ்வொரு படத்திலும் புதுமை தனித்தன்மை என்று வித்யாசமான கதாபாத்திரங்களிலும் ஹிப் ஹாப் ஆதி நடித்து வருகிறார். அதன்படி அவர் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கே கணேசன் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு பட இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில்  ‘பி.டி சார்’ என்ற படத்தில் ஆதி நடித்து வருகிறார்.

இதனிடையே ‘மரகதநாணயம்’ பட இயக்குனர் ARK சரவணன் இயக்கி வரும் புதிய படத்தில் ஆதி நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பு நிறுவனம் சத்யா ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு ‘வீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆதி சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவருடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில்  இப்படத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த மின்னல் முரளி திரைப்படம் போல் மின்னல் சார்ந்த சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தீபக் D மேனன் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்கிறார்.

இப்படத்தின் அறிவிப்பிலிருந்து முதல் பார்வை என்று ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் ‘தண்டர் காரன்’ என்ற முதல் பாடல் வெளியாகி தற்போது இணையத்தில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து கவனம் பெற்றது. மேலும் எதிர்பார்ப்பை கூட்டி கொண்டே போகும் வீரன் படத்தின் இரண்டாவது பாடலான ‘பப்பர மிட்டா’ பாடலை  தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இசையில் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதியுள்ள இப்பாடலை ஹிப் ஹாப் ஆதியுடன் இணைந்து துணிவு பட பாடலாசிரியரும் பிரபல பாடகருமான வைசாக் இப்பாடலை பாடியுள்ளார்.

90 காலக் கட்டத்தை நினைவு கூறும் வரிகளுடன் ஹிப் ஹாப் ஆதியின் துள்ளலான இசையில் அமைந்துள்ள இப்பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  

ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்பை கொண்டிருக்கும் வீரன் திரைப்படம் வரும் ஜூன் 2 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர் எல்லையில் யாருக்கு சிலை..? கபடியில் மோதும் ‘இராவண கோட்டம்’.. - படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Sneak peek  வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

ஊர் எல்லையில் யாருக்கு சிலை..? கபடியில் மோதும் ‘இராவண கோட்டம்’.. - படக்குழு வெளியிட்ட அட்டகாசமான Sneak peek வைரலாகும் வீடியோ இதோ..

1990 முதல் 2018 வரை.. பொன்னியின் செல்வன் படத்தின் சுவாரஸ்யமான பயணம்  -  உண்மையை உடைத்த சிவா ஆனந்த் - Exclusive interview இதோ..
சினிமா

1990 முதல் 2018 வரை.. பொன்னியின் செல்வன் படத்தின் சுவாரஸ்யமான பயணம் - உண்மையை உடைத்த சிவா ஆனந்த் - Exclusive interview இதோ..

“ஹாலிவுட்டில் மட்டுமல்ல நம் ஊரிலும் ஒருத்தர் இருக்கிறார்..” DSP - யை புகழ்ந்த உலகநாயகன் கமல் ஹாசன்.. – ரசிகர்களால்  வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

“ஹாலிவுட்டில் மட்டுமல்ல நம் ஊரிலும் ஒருத்தர் இருக்கிறார்..” DSP - யை புகழ்ந்த உலகநாயகன் கமல் ஹாசன்.. – ரசிகர்களால் வைரலாகும் வீடியோ இதோ..